அரசின் கொரோனா தடுப்பு விதிமுறைகள் மீறல்… மூன்று முன்னாள் இரவு விடுதிகளின் உணவு- பான உரிமம் ரத்து!

Photo: SFA

 

கொரோனாவால் பரவல் தற்போது மீண்டும் அதிகரித்துள்ளதால் உயர் விழிப்புநிலை இரண்டாம் கட்டம் சிங்கப்பூர் முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், அனைத்து பகுதிகளிலும் தடுப்பூசி நிலையங்கள் அமைக்கப்பட்டு, பொதுமக்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது.

அதேபோல், பொதுமக்கள் வெளியே செல்லும் போது கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்; பொது இடங்களில் சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும்; கைகளை அடிக்கடி சோப்பு அல்லது கிருமிநாசினிக் கொண்டு கழுவ வேண்டும் என்று சுகாதாரத்துறை அறிவுறுத்தி வருகிறது.

அரசின் கொரோனா தடுப்பு விதிமுறைகளை உணவு- பானக் கடைகள் உள்ளிட்ட கடைகள் பின்பற்றுகிறதா என்பதை உணவுத்துறை அதிகாரிகள் தொடர்ந்து நேரில் ஆய்வு செய்து வருகின்றன. அந்த வகையில், அரசின் கொரோனா தடுப்பு விதிமுறைகளை மீறியதற்காக உணவு -பானக் கடைகளாகத் (Food and Beverage-‘F&B’) தற்போது செயல்படும் The Charm, Icon II, Frederico’s Paddles Too Pub & Cafeteria ஆகிய மூன்று முன்னாள் இரவு விடுதிகளின் உரிமங்களை சிங்கப்பூர் உணவு அமைப்பு (Singapore Food Agency- ‘SFA’) ரத்துச் செய்து உத்தரவிட்டுள்ளது.

‘StarHub’ நிறுவனம் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

கடந்த ஜூலை 13- ஆம் தேதி அன்று ‘The Charm’ உணவு- பானக் கடையில் முறையான சமூக இடைவெளியை பின்பற்றாமல், தடைச் செய்யப்பட்ட விளையாட்டுகள் நடைபெற்றது. அதேபோல், ஜூலை 13- ஆம் தேதி அன்று Icon II நிலையத்திலும் இதே போன்ற சம்பவம் நடந்துள்ளது.

உணவு-பானக் கடைகளாகச் செயல்படும் இரவு விடுதிகள் அனைத்தையும், ஜூலை 16- ஆம் தேதி முதல் ஜூலை 30- ஆம் தேதி வரை, தற்காலிகமாக மூட அரசாங்கம் உத்தரவு பிறப்பித்திருந்த நிலையில், அதை மதிக்காமல் ஜூலை 17- ஆம் தேதி அன்று ‘Frederico’s Paddles Too Pub & Cafeteria’ விடுதியை நடத்தியுள்ளது. இந்த காரணங்களால்தான் உரிமங்கள் ரத்துச் செய்யப்பட்டுள்ளன.