சிங்கப்பூரில் கொரோனா தொற்று கட்டுக்குள் வந்தால் மூன்றாம் கட்ட தளர்வு தொடங்கப்படும்; அமைச்சர் லாரன்ஸ் வோங்.!

Government may present plans for Phase 3 reopening in coming weeks, says Lawrence Wong Read more at https://www.todayonline.com/singapore/covid-19-government-may-present-plans-phase-3-reopening-coming-weeks-says-lawrence-wong
Photo: Today

சிங்கப்பூரில் கொரோனா வைரஸ் (COVID-19) கிருமித்தொற்று தொடர்ந்து கட்டுக்குள் இருந்தால் மூன்றாம் கட்டம் தளர்வுகள் தொடங்கப்படலாம் என அமைச்சர் லாரன்ஸ் வோங் தெரிவித்துள்ளார்.

COVID-19 விவகாரங்களைக் கையாளும் அமைச்சகங்களுக்கு இடையிலான பணிக்குழுவின் நேற்றைய (23-09-2020) செய்தியாளர் சந்திப்பின் போது அமைச்சர் வோங் இந்த தகவலை வெளியிட்டார்.

இதையும் படிங்க: சிங்கப்பூரில் இருந்து தமிழகம் வந்து தனிமைப்படுத்தப்பட்டவரின் மரணம் – நீடிக்கும் மர்மம்..!

சிங்கப்பூரில் மூன்றாம் கட்ட தளர்வு நடைமுறைக்கு வந்தால் சமூக அளவிலான ஒன்றுகூடல்கள், பாதுகப்பான பயண நடவடிக்கைகள் போன்றவை மீண்டும் தொடங்க அனுமதி வழங்கப்படலாம்.

மேலும், உணவகங்களில் ஒரு மேசையில் 5 பேருக்கு அதிகமாக அமர்வது மற்றும் வீடுகளில் 5 பேருக்கு மேல் கூடுவது போன்றவையும் அனுமதிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: சிங்கப்பூரில் 15,000-க்கும் மேற்பட்ட மலேசியர்கள் வேலையிழப்பு..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…