சிங்கப்பூரில் 15,000-க்கும் மேற்பட்ட மலேசியர்கள் வேலையிழப்பு..!

lazada-retrenchment-fdawu-ntuc
(Photo: Reuters)

COVID-19 தொற்று காரணமாக சிங்கப்பூரில் சுமார் 15,000-க்கும் மேற்பட்ட மலேசியர்கள் வேலையிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவிட் -19 தொற்றுநோய் ஊழியர் சந்தையில் பாதிப்பை ஏற்படுத்தியால், இந்த ஆண்டு ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களுக்கு இடையில் சுமார் 15,666 மலேசியர்கள் வேலை இழந்துவிட்டதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிப்பதாக MALAY MAIL குறிப்பிட்டுள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் அதிகாரிகளின் சோதனையின்போது தப்பிக்க முயன்ற நபர் கீழே விழுந்து மரணம்..!

மலேசிய மனிதவளத்துறை அமைச்சர் எம்.சரவணன் கூறியதாவது, இதில் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலோர் சேவைத் துறையில் உள்ளனர் என்று The Malaysian Reserve குறிப்பை மேற்கோள்காட்டி MALAY MAIL செய்தி வெளியிட்டுள்ளது.

இதில் சுமார் 11,123 பேர் சேவைத் துறையிலும், மேலும் சுமார் 3,604 பேர் உற்பத்தி துறையிலும் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே போல, 939 பேர் கட்டுமானத் துறையிலும் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதில் தொற்றுநோயால் வேலை இழந்தவர்கள் குறித்து தரவுகளை கேட்ட செனட்டர் லீவ் சின் டோங்கிற்கு (Liew Chin Tong) மேற்குறிப்பிட்ட பதில்களை சரவணன் தெரிவித்தார்.

கிருமித்தொற்று பாதுகாப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம், சிங்கப்பூர் – மலேசியா இடையே இருநாட்டு எல்லைகள் மூடப்பட்டன.

ஜூலை 26 அன்று, மலேசியாவின் திரு. ஹிஷாமுதீன் ஹுசைன் மற்றும் சிங்கப்பூரின் திரு. விவியன் பாலகிருஷ்ணன் ஆகியோர் ஜொகூர் காஸ்வேயில் நடுப்பகுதியில் சந்தித்து எல்லை தாண்டிய பயணத்தை மீண்டும் ஆகஸ்ட் மாதத்தில் தொடங்க ஒப்புக்கொண்டனர்.

இதனை அடுத்து, கடந்த ஆகஸ்ட் மாதம் இரு நாடுகளுக்கு இடையில் கட்டுப்பாடுகளுடன் கூடிய போக்குவரத்து சேவைகள் மீண்டும் தொடங்கியுள்ளன.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் மேலும் மூன்று உணவு மற்றும் பான கடைகளை மூட உத்தரவு..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…