சிங்கப்பூரில் இருந்து தமிழகம் வந்து தனிமைப்படுத்தப்பட்டவரின் மரணம் – நீடிக்கும் மர்மம்..!

(Photo: Thanthi TV)

தமிழ்நாடு, கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகேயுள்ள நிதிநத்தம் கிராமத்தைச் சேர்ந்த சுந்தரவடிவேல் என்பவர், இவர் சிங்கப்பூரில் வேலைபார்த்து வந்தார்.

இவர் கொரோனா ஊரடங்கு மத்தியில் கடந்த ஜூன் 25ஆம் தேதி சிங்கப்பூரில் இருந்து சென்னை வந்தார். பின்னர், இவர் சென்னை தேனாம் பேட்டை ஹயாத் ஹோட்டலில் தனிமைப்படுத்தபட்டார்.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் 15,000-க்கும் மேற்பட்ட மலேசியர்கள் வேலையிழப்பு..!

அவர் அங்கு தங்கி இருந்த நிலையில், கடந்த ஜூன் 29ஆம் தேதி இறந்துவிட்டதாக காவல்துறை அவரின் வீட்டுக்கு சடலத்தை அனுப்பியது.

அதனை தொடர்ந்து, தமிழக முதல்வருக்கு கேள்வி எழுப்பும் விதமாக ‘என் தாலிக்கு பதில் சொல்லியே ஆகணும்’

என்று சுந்தரவடிவேலின் மனைவி சந்திரா வெளியிட்ட கண்ணீர் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.

இந்த சம்பவம் தொடர்பாக விசாரித்து, இதில் அலட்சியமாக செயல்பட்ட அவர் தங்கியிருந்த ஓட்டல் நிர்வாகம், அதனை அடுத்து தேனாம்பேட்டை காவல்துறையின் செயல்பாடுகள் மற்றும் சுந்தரவடிவேல் சிங்கப்பூரில் இருந்து கொண்டு வந்திருந்த நகை, பணம் உள்ளிட்ட உடமைகள் களவு போயிருந்ததையும் ஆதாரத்துடன் “நக்கீரன்” பத்திரிக்கை செய்தியாக வெளியிட்டது.

இந்நிலையில், அவர் இறந்து சுமார் 75 நாட்கள் கடந்து சென்றும் இன்னும் இறப்புச் சான்றிதழையும், பிரேதப் பரிசோதனை அறிக்கையையும் கொடுக்காமல் அலைக்கழிக்கப்படுவதாக கண்ணீர்மல்க சந்திரா குறிப்பிட்டுள்ளார்.

நோய்த் தொற்று இல்லை என்று நிரூபிக்கப்பட்ட அவர், உயிரிழந்தது குறித்து அரசு அதிகாரிகளும், காவல்துறையும் தெளிவு படுத்த வேண்டும் என்று ஒன்றரை வயது கைக் குழந்தை சிவரட்சனுடன் போராடிக் கொண்டிருக்கிறார் மனைவி சந்திரா.

சிங்கப்பூரில் இருந்து நல்ல உடல்நிலையில் மருத்துவச் சான்றிதழோடு திரும்பியதாகவும், அவரைக் கண்காணிக்காத ஓட்டல் நிர்வாகம், அரசு அதிகாரிகளின் அலட்சியத்தால் நாங்கள் இப்போது தவிக்கிறோம் என்று அவரின் மனைவி கண்ணீரோடு குறிப்பிட்டுள்ளார்.

என் கணவரின் இறப்பு தொடர்பான எந்தவொரு ஆதாரத்தையும் கொடுக்காமல், மேலும் இறப்புக்கான காரணத்தையும் தெரிவிக்காமல் எங்களை, எங்களுக்காக துணை நிற்பவர்களை இப்படி அலைக்கழிப்பது எந்த வகையில் நியாயம் என்றும் கூறியுள்ளார்.

நன்றி : நக்கீரன்

இதையும் படிங்க : சிங்கப்பூரில் அதிகாரிகளின் சோதனையின்போது தப்பிக்க முயன்ற நபர் கீழே விழுந்து மரணம்..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…