சிங்கப்பூரில் ஏப்ரல் 1 முதல் சவாரிக்கு கூடுதல் S$0.50 கட்டணம் விதிக்கும் Grab

Grab allows passengers front seat
(Photo: TODAY)

சிங்கப்பூரில் வரும் ஏப். 1, 2022 முதல் Grab சவாரி கட்டணம் S$0.50 அதிகரிக்கும் என கூறப்பட்டுள்ளது.

ஓட்டுநர்களுக்கு அதிக இயக்கச் செலவுகள் இருக்கும் நிலையில் அதனை சமாளிக்க உதவும் வகையில் இந்த தற்காலிக ஓட்டுநர் கட்டணத்தை அறிமுகப்படுத்துவதாக சூப்பர் செயலி கூறியது.

“நீ இங்க வேலைக்கு வந்திருக்க, நீ போ”… சிங்கப்பூர் MRT ரயிலில் வெளிநாட்டு ஊழியருக்கு, சிங்கப்பூரருக்கும் கடும் வாக்குவாதம்!

ஏப்ரல் 1 முதல் மே 31 வரை, வழக்கமான (standard) டாக்ஸி சேவையைத் தவிர, Grab இன் அனைத்து போக்குவரத்து சேவைகளிலும் கூடுதலாக S$0.50 சேர்க்கப்படும்.

இந்த கூடுதல் கட்டணம் கமிஷனுக்கு உட்பட்டது அல்ல எனவும் கூறப்பட்டுள்ளது.

சில நாட்களுக்கு முன்பு Gojek நிறுவனமும் இதேபோன்ற நடவடிக்கை குறித்து அறிவித்தது, மார்ச் 31 முதல் மே 31, 2022 வரை அனைத்து பயணங்களுக்கும் (GoTaxi தவிர) தற்காலிக ஓட்டுநர் கட்டணம் விதிக்கப்படும்.

  • Gojek இன் 10km க்கும் குறைவான பயணங்களுக்கு: +S$0.50
  • Gojek இன் 10km மற்றும் அதற்கு மேல் உள்ள பயணங்களுக்கு : +S$0.80

கோவிட்-19 நடவடிக்கை தளர்வு: “பீர் எடு கொண்டாடு” என இலவச பீர் வழங்கும் Tiger Beer!