32 பேரக்குழந்தைகள், 46 கொள்ளுப் பேரக்குழந்தைகளைப் பிரிந்து சென்ற 106 வயது பாட்டி…. சோகத்தில் குடும்பத்தினர்!

32 பேரக்குழந்தைகள், 46 கொள்ளுப் பேரக்குழந்தைகளைப் பிரிந்து சென்ற 106 வயது பாட்டி.... சோகத்தில் குடும்பத்தினர்!
Photo: Shin Min Daily News

 

சிங்கப்பூரில் வசித்து வந்த மிக வயதான பாட்டி, கடந்த டிசம்பர் 07- ஆம் தேதி பிற்பகல் 03.30 மணியளவில் மருத்துவமனையில் காலமானார். பாட்டியின் வயது 106.

இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு விசா இல்லா இலவச அனுமதி – பொருளாதாரத்தை மேம்படுத்த திட்டமிடும் நாடுகள்

இந்த பாட்டிக்கு 10 குழந்தைகளும், 32 பேரக் குழந்தைகளும், 46 கொள்ளுப்பேரக் குழந்தைகளும் உள்ளனர். பாட்டியின் உயிரிழப்பால் அந்த குடும்பத்தினர் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

தாயின் நினைவுகள் குறித்து பகிர்ந்துக் கொண்ட அவரது 73 வயதான மகன் ஜூவோ ரோங்ஃபன் (Zhuo Rongfen), “தனது தாய் தனது இறுதிச் சடங்கிற்கு என்று தனியாக பணத்தை சேமித்து வைத்துள்ளார். எனது தாயின் ஒவ்வொரு பிறந்தநாளுக்கும் குடும்ப உறவினர்கள், எங்களது வீட்டிற்கு வருகைத் தருவார்கள். இதனால் அந்த தினம் எங்களது வீடு விழாக்கோலம் பூண்டிருக்கும்.

பாயா லெபார் MRT நிலையத்துக்குள் சண்டை – 3 பேரை மடக்கி பிடித்த போலீசார்

100 வயது வரை எனது தாய் உடல் ஆரோக்கியத்துடன் நன்றாக இருந்தார். நாள்தோறும் அவர் உடற்பயிற்சி செய்து வந்தார். 100- வயதுக்கு பிறகு அவருக்கு சிறிய அறுவைச் சிகிச்சைச் செய்யப்பட்டது. அதன் பிறகு அவரது உடல் நலிவுற்றது. வாரந்தோறும், சனிக்கிழமை அன்று எனது தாயைப் பார்க்க குடும்ப உறுப்பினர்கள் வருகைத் தருவார்கள். அன்றைய தினம் நாங்கள் அனைவரும் மிகவும் மகிழ்ச்சியாக இருப்போம்; குறிப்பாக, எனது தாய் இறக்கும் வரை மிகுந்த மகிழ்ச்சியுடன் இருந்தார்.

எங்களது சொந்த ஊர் ஜோகூர். கடந்த 1970- ஆம் ஆண்டு சிங்கப்பூரில் குடியேறினோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.