சண்டையிட்டு கொண்ட இரு Crested வகை பல்லிகள்.. 2 நிமிடத்திற்குள் நிறம் மாறும் அதிசயம் – சிங்கப்பூர் கலைஞரின் அசல் “கிளிக்”

green-crested-lizards-sungei-buloh-fight
Images courtesy: Adam Maniman

சுங்கே பூலோ வெட்லேண்ட் ரிசர்வ் பகுதியில் சண்டையிட்டு கொண்ட 2 பச்சை நிற Crested வகை பல்லிகளின் வியப்பூட்டும் காட்சிகளை புகைப்படக் கலைஞர் ஒருவர் படம்பிடித்து அசத்தியுள்ளார்.

ஆடம் மணியம் (Adam Maniam) என்ற புகைப்படக் கலைஞர் தனது குடும்பத்துடன் சுங்கே பூலோ வெட்லேண்ட் ரிசர்வ் பகுதிக்கு கடந்த டிசம்பர் 30, 2023 அன்று சென்றுள்ளார்.

“இந்தியர்கள் விசா இல்லாமல் தாராளமாக வரலாம்” – சுற்றுலா பயணிகளுக்கு அடிக்கும் அதிஷ்டம்

Images courtesy: Adam Maniman

அப்போது, ​​தாவரங்களில் சண்டையிட்டு கொண்ட ஏதோ ஒன்று நடைபாதையில் விழுவதை அவர் கவனித்தார்.

உடனே தனது கேமாராவை எடுத்த மணியம், அந்த வியப்பான காட்சியை படம்பிடிக்க தொடங்கினார்.

Images courtesy: Adam Maniman

அது என்ன என்று அவருக்கு முதலில் எதுமே தெரியவில்லை, “முதலில் காட்சியை படம்பிடிப்போம், பிறகும் அது என்ன என்பதை ஆராய்வோம்” என்ற புகைப்படக் கலைஞர்கள் மத்தியில் உள்ள பழமொழியை அவர் குறிப்பிட்டார்.

அவை இரண்டும் முதுகில் முகடு போன்ற ரோமங்களை கொண்ட பச்சை முகடு பல்லிகள் ( Green crested lizards) என்றும், அவை இரண்டுக்கும் இடையே சண்டை வெடித்ததாகவும் அவர் சொன்னார்.

Singapore Wildlife Sightings என்ற ஃபேஸ்புக் குழுவில் சண்டையின் காட்சி படங்களை அவர் பகிர்ந்துகொண்டார்.

அந்த சண்டையின்போது, சில நிமிட இடைவெளியில் எடுக்கப்பட்ட இரண்டு புகைப்படங்களில் பல்லியின் நிறம் மாறுவதைக் காண முடிந்தது.

Images courtesy: Adam Maniman

சிங்கப்பூரை பூர்வீகமாகக் கொண்ட இந்த உயிரினங்கள், பொதுவாக பூச்சிகளை உண்டு வாழ்பவை, இவை சிங்கப்பூரில் பரவலாகக் காணப்படுகின்றன.

ஆனால் தற்போது இந்த அளவில் உள்ள அதன் இனம் ​​உள்நாட்டில் அரிதானதாகவே பார்க்கப்படுகிறது.

Images courtesy: Adam Maniman

“இந்தியர்கள் விசா இல்லாமல் தாராளமாக வரலாம்” – சுற்றுலா பயணிகளுக்கு அடிக்கும் அதிஷ்டம்