சிங்கப்பூர் நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம்!

Photo: Guidance Tamil Nadu Official Twitter page

பிப்ரவரி 23- ஆம் தேதி அன்று காலை 10.00 மணிக்கு சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தமிழக தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் (Guidance Tamilnadu) அலுவலகத்தில் தமிழக அரசின், தமிழக தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் விஷ்ணு மற்றும் சிங்கப்பூர் அரசின் நிறுவனமான எண்டர்பிரைசஸ் சிங்கப்பூர் நிறுவனத்தின் (Enterprise Singapore) தலைவர் பீட்டர் ஓங் ஆகியோர் தொழில் முதலீடுகள் குறித்து ஆலோசனை நடத்தினர்.

UPI- PayNow இணைப்பால் ஏற்படும் நன்மைகள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்!

இந்த ஆலோசனையில் தமிழக அரசின் உயர் அதிகாரிகள் மற்றும் சிங்கப்பூர் அரசின் உயர் அதிகாரிகள், சென்னையில் உள்ள சிங்கப்பூர் துணை தூதரகத்தின் தூதர் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.

இதில், சிங்கப்பூர் நிறுவனங்களுக்கான முதலீட்டு வசதிகளை ஏற்படுத்தி தருவது தொடர்பாக, தமிழக தொழில் வழிகாட்டி நிறுவனம் மற்றும் எண்டர்பிரைசஸ் சிங்கப்பூர் நிறுவனம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

தொழிலாளியின் திருமணத்துக்காக சிங்கப்பூரில் இருந்து புதுக்கோட்டைக்கு வந்த முதலாளி!

இந்த ஒப்பந்தத்தில் சிங்கப்பூரைச் சேர்ந்த நிறுவனங்கள், தமிழகத்தில் முதலீடு செய்வதற்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பது, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு ஊக்குவிப்பு, வர்த்தக பன்முகத்தன்மை உட்பட பல்வேறு விஷயங்களும் குறிப்பிடப்பட்டுள்ளது.