உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்குமாறு சிங்கப்பூர் அமைச்சர்கள், தொழில் நிறுவனங்களுக்கு குஜராத் முதலமைச்சர் நேரில் அழைப்பு!

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்குமாறு சிங்கப்பூர் அமைச்சர்கள், தொழில் நிறுவனங்களுக்கு குஜராத் முதலமைச்சர் நேரில் அழைப்பு!
Photo: Gujarat Chief Minister

 

வரும் ஜனவரி 10- ஆம் தேதி முதல் ஜனவரி 12- ஆம் தேதி வரை மூன்று நாட்களுக்கு குஜராத் மாநிலம், காந்தி நகரில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு (Vibrant Gujarat Global Summit- 2024) நடைபெறவுள்ளது. மாநாட்டிற்கு அழைப்பு விடுப்பதற்காக, சிங்கப்பூருக்கு அரசுமுறைப் பயணமாக வந்திருந்த, இந்தியாவின் முக்கியமான மாநிலங்களின் ஒன்றான குஜராத் மாநில முதலமைச்சர் பூபேந்திர பட்டேல், டிசம்பர் 01- ஆம் தேதி அன்று காலை 10.00 மணிக்கு சிங்கப்பூரின் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் கான் கிம் யோங்-கை நேரில் சந்தித்துப் பேசினார். அப்போது, குஜராத் மாநிலத்தில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்தார்.

சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சரைச் சந்தித்த குஜராத் முதலமைச்சர்!

அத்துடன், உலக முதலீட்டாளர்கள் மாநாட்டு அழைப்பிதழையும், நினைவுப் பரிசையும் வழங்கி அழைத்து விடுத்தார். இந்த சந்திப்பு குறித்து குஜராத் மாநில முதலமைச்சர் பூபேந்திர பட்டேல் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “சிங்கப்பூர் வர்த்தகம் மற்றும் தொழில்துறைக்கான மாண்புமிகு அமைச்சர் கான் கிம் யோங்கைச் சந்தித்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். சிங்கப்பூருக்கும், இந்தியாவுக்கும் இடையிலான இருதரப்பு வர்த்தகம் மற்றும் முதலீடு குறித்து நாங்கள் விவாதித்தோம்.

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்குமாறு சிங்கப்பூர் அமைச்சர்கள், தொழில் நிறுவனங்களுக்கு குஜராத் முதலமைச்சர் நேரில் அழைப்பு!
Photo: Gujarat Chief Minister

சிங்கப்பூர் நிறுவனங்கள் இந்தியாவுடன் கூட்டு சேரும் ஆர்வத்தை அவரிடமிருந்து அறிந்து கொள்வதில் மகிழ்ச்சி. 2024- ஆம் ஆண்டு குஜராத் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுத்தேன்” எனத் தெரிவித்துள்ளார்.

இந்திய ஊழியர்களுக்கு அனுமதி… 400க்கும் மேற்பட்ட இந்திய உணவகங்கள் பயன்பெறும்

அதைத் தொடர்ந்து, சிங்கப்பூரில் உள்ள முன்னணி தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்புப் பிரதிநிதிகளைச் சந்தித்த குஜராத் மாநில முதலமைச்சர் பூபேந்திர பட்டேல், குஜராத் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்குமாறும், குஜராத்தில் தொழில் முதலீடுகளைச் செய்ய வருமாறும், தொழில் நிறுவனங்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் அரசு செய்து தரும் என்று கூறி அழைப்பு விடுத்தார்.