சிங்கப்பூரில் இன்றும் புகைமூட்டம் தொடரும்.. ஆரோக்கியமற்ற நிலையை எட்டிய PSI குறியீடு

Hazy conditions spore
haze.gov.sg website

சிங்கப்பூரில் நேற்று (அக்.7) நிலவிய புகைமூட்டம் இன்று ( அக். 8) வரை தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக தேசியச் சுற்றுப்புற அமைப்பு (NEA) தெரிவித்துள்ளது.

சிங்கப்பூரில் நேற்று PSI குறியீடு நான்கு ஆண்டுகளில் இல்லாத அளவு முதல் முறையாக ஆரோக்கியமற்ற நிலையை எட்டியது.

சிகரெட் தொடர்பான விவகாரம்.. தங்கும் விடுதி அருகே சட்டவிரோத செயல்… சிக்கிய வெளிநாட்டு ஊழியர்கள் 5 பேர்

சிங்கப்பூரின் கிழக்குப் பகுதியில் காற்று மாசுபடுத்தும் தரநிலைக் குறியீடு (PSI) அக்.7 ஆம் தேதி காலை 7 மணிக்கு ஆரோக்கியமற்ற நிலையை எட்டியது என NEA கூறியது.

நேற்று சிங்கப்பூரின் கிழக்குப் பகுதியில் PSI குறியீடு 111 எனவும், மத்திய பகுதிகளில் 102 எனவும் பதிவானது.

இந்தோனேசிய பகுதியில் காட்டுத்தீ அதிகரித்துள்ளதால் இந்த புகைமூட்டம் ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

PSI குறியீடு

இந்த PSI குறியீடு 101 முதல் 200 அளவில் இருந்தால் காற்றின் தரம் “ஆரோக்கியமற்றது” என்பதை குறிக்கும்.

அதே போல, 201 முதல் 300 வரை இருந்தால் “மிக ஆரோக்கியமற்றது” என்பதையும், 301க்கு மேல் இருந்தால் “அபாயகரமானது” என்பதையும் குறிக்கும்.

ஃபோர்க்லிஃப்ட் இயந்திரம் தாக்கி காலை இழந்த ஊழியர்… நிறுவனத்துக்கு S$240,000 அபராதம்