சிங்கப்பூரில் பலத்த கனமழை… சில இடங்களுக்கு செல்ல வேண்டாம் – வெள்ள அபாய எச்சரிக்கை!

singapore-weather-rest-of-september-2022
TODAY

சிங்கப்பூரின் சில பகுதிகளில் இன்று பிற்பகல் (மார்ச் 7) பலத்த மழை வெளுத்து வாங்கியது.

இதனால் ஜூரோங் ஈஸ்ட் 32 மற்றும் பூன் லே வே அருகே உள்ள எண்டர்பிரைஸ் சாலையில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக அந்த சாலைகளில் போக்குவரத்துக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

ஊழியர் பற்றாக்குறை… கட்டுமான, கடல் துறை Work permit ஊழியர்களின் நுழைவு நடைமுறை எளிமை! – செய்ய வேண்டியது என்ன?

இந்நிலையில், தேசியபயனீட்டு கழகமான PUB அதன் அதிகாரிகளை உதவிக்காக அந்த பகுதிகளுக்கு அனுப்பியதாக கூறியது.

ஜூரோங் ஈஸ்ட் ஸ்ட்ரீட் 32 இல் ஏற்பட்ட திடீர் வெள்ளம் மாலை 3.50 மணியளவில் வடிந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

பிற்பகல் 3.15 மணியளவில் சாலையில் உள்ள இரண்டு வீட்டுவசதி கழக குடியிருப்புகளுக்கு அருகிலுள்ள வடிகால்களில் நீர்மட்டம் 90 சதவீதத்தை எட்டியதாக PUB முன்னரே தொடர் எச்சரிக்கை செய்து வந்தது.

பின்னர், சோவா சூ காங் அவென்யூ 1 மற்றும் டெக் வை லேனுக்கு பிற்பகல் 3.25 மணிக்கும், உட்லண்ட்ஸ் சாலை மற்றும் கிராஞ்சி விரைவுச்சாலைக்கு மாலை 3.30 மணிக்கு PUB வெள்ள அபாய எச்சரிக்கை செய்தது.

இந்த பகுதிகளை தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு PUB அறிவுறுத்தியுள்ளது.

வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்ட பிற இடங்கள்:

  • ஜாலான் பூன் லே
  • பூன் லே வே
  • ஜூரோங்கில் ஜாலான் துகாங்
  • உட்லண்ட்ஸ் சாலை மற்றும் கிராஞ்சி எக்ஸ்பிரஸ்வே
  • ஜூரோங்கில் உள்ள International Road மற்றும் இரண்டாவது சின் பீ சாலை
  • சோவா சூ காங் அவென்யூ 1
  • ஜுரோங்கில் வான் லீ சாலை மற்றும் எண்டர்பிரைஸ் சாலை
  • சுங்கே லஞ்சர் (ஜாலான் பூன் லே)
  • தானா மேரா கன்ட்ரி கிளப்பில் உள்ள சாங்கி விமான நிலைய மாற்று வடிகால்

இரத்தம் தோய்ந்த துண்டான கால் வீடியோ இணையத்தில் பரவல்… கண்டெடுக்கப்பட்ட சடலம் – என்ன நடந்தது?