சிங்கப்பூர் முழுவதும் நள்ளிரவில் வெளுத்துவாங்கிய கனமழை: சில்..சில்! கூல்..கூல்!! கிளைமேட் – பொதுமக்கள் மகிழ்ச்சி!

rain-respite-singapore
Meteorological Service of Singapore

இன்று ஜூலை 20ம் தேதி நள்ளிரவு 2 மணிக்குப் பிறகு சிங்கப்பூரில் கனமழை கொட்டித்தீர்த்தது, தீவு முழுவதும் வாட்டிவதைத்த வெப்பத்திலிருந்து பொதுமக்களுக்கு சிறிது நிம்மதி கிடைத்தது.

அதாவது இன்று புதன்கிழமை நள்ளிரவு சுமார் 2:02 மணியளவில் மழை வெளுத்துக்கட்ட தொடங்கியது. அச்சமயம் வெப்பநிலையானது 28.4°C முதல் 29.7°C வரை இருந்தது.

சிங்கப்பூரில் 50 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வரும் பிரபல உணவகத்தின் உரிமையாளர் காலமானார்

சிங்கப்பூரின் பல பகுதிகளில் நள்ளிரவு 2.30 மணி முதல் 3.30 மணி வரை மிதமான முதல் பலத்த இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுவதாக சிங்கப்பூரின் வானிலை ஆய்வகம் முன்னர் கூறியது.

இந்த கனமழை காரணமாக தீவின் மேற்குப் பகுதிகளில் குளிர் அதிகமாக இருந்தது. ஈஸ்ட் கோஸ்ட் பார்க்வே பகுதியில் வெப்பநிலை நள்ளிரவு 2:17 மணிக்கு 29.9°C ஐத் தொட்டது.

அதே போல, அதிகாலை 3:20 மணியளவில் சிங்கப்பூரின் மேற்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் அதிக மழைப்பொழிவு பதிவானது.

இருப்பினும் நியூட்டன், வாம்போவா மற்றும் சோமர்செட் போன்ற மத்திய பகுதிகளில் மிகக் குறைந்த அளவு மழை பதிவானதாக கூறப்பட்டுள்ளது.

“சம்பளம் சரியாக கொடுப்பதில்லை.. வேலைல இருந்து தூக்கிட்டாங்க..” சிங்கப்பூரில் ஊழியர்கள் வைக்கும் புகார்கள் – MOM ரிப்போர்ட்