தொடரும் கனமழை….சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கான விமான சேவையை ரத்துச் செய்த இண்டிகோ நிறுவனம்!

தொடரும் கனமழை....சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கான விமான சேவையை ரத்துச் செய்த இண்டிகோ நிறுவனம்!
Video Crop Image

 

மிக்ஜாம் புயலால், சென்னையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக, சென்னையில் பல்வேறு சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. அதேபோல், குடியிருப்புப் பகுதிகளில் மழைநீர் சூழ்ந்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, சென்னை சர்வதேச விமான நிலையத்தில் விமானங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இடம், விமான ஓடுதளப் பாதையில் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது.

வெளிநாட்டு ஊழியருக்கு சொன்ன சம்பளம் கொடுக்காமல் அலைக்கழித்த முதலாளி – சட்டப்படி அணுகி S$13,677 தொகையை வாங்கி அசத்திய ஊழியர்

தொடரும் கனமழை....சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கான விமான சேவையை ரத்துச் செய்த இண்டிகோ நிறுவனம்!
Photo: Indigo Airlines Website

இதன் காரணமாக, விமான நிலையம் இன்று (டிச.04) இரவு 11.00 மணி வரை மூடப்பட்டிருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், விமான நிலையத்தில் விமானங்களின் புறப்பாடும், வருகையும் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது என்றும் விமான நிலைய நிர்வாகம் கூறியுள்ளது. இதனால் சென்னை விமான நிலையத்திற்கு வர வேண்டிய விமானங்கள், பெங்களூரு, கோவை விமான நிலையத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளது.

‘மிக்ஜாம் புயல்’- வெளுத்து வாங்கிய கனமழை….மூடப்பட்ட சென்னை விமான நிலையம்!

இந்த நிலையில், இன்று (டிச.04) சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு புறப்பட வேண்டிய இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான இரண்டு விமான சேவைகளை விமான நிறுவனம் ரத்து செய்தது. இதனால் சிங்கப்பூருக்கு செல்லவிருந்த பயணிகள் கடும் அவதியடைந்தனர். அதேபோல், விமான நிலையத்திற்கு வெளியே செல்ல முடியாததால், விமான நிலையத்திலேயே பயணிகள் பல மணி நேரம் காத்திருக்கின்றனர்.