COVID-19: சிங்கப்பூரில் கோவில்களுக்கு செல்வோருக்கு இந்து அறக்கட்டளை வாரியம் அறிவுரை..!

Hindu endowment Board advises temple goers in Singapore
Hindu endowment Board advises temple goers in Singapore

கொரோனா வைரஸ் பரவி வரும் சூழலில், முதியவர்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ளும் விதமாக, அவர்களில் நோய்வாய்ப்பட்டவர்கள் கோவில்களுக்குச் செல்வதைத் தவிர்க்கலாம் என்று இந்து அறக்கட்டளை வாரியம் அறிவுரை கூறியுள்ளது.

கோவில்களுக்கு வருகை தருவோருக்கு உடல் வெப்பநிலையைச் பரிசோதிக்கும்படியும், மேலும் உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள் யாரேனும் இருந்தால் உடனடியாக அவர்களை மருத்துவரைப் பார்க்கும்படி அறிவுறுத்தும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளன.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் புதிதாக மேலும் 13 பேருக்கு COVID-19 உறுதி; மொத்த சம்பவம் 200ஆக உயர்வு..!

கூடுதலாக, பஜனைகள், சமய வகுப்புகள், சொற்பொழிவுகள் போன்ற ஆலய நிகழ்ச்சிகளை ஒத்திவைக்கும்படி ஆலயங்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளன.

இருப்பினும், 250க்கும் குறைவான பக்தர்கள் பங்கேற்கும் பட்சத்தில் அவற்றை நடத்தலாம். அதில் பங்கேற்பாளர்கள் அருகருகே அமராமல் கவனமுடன் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

அதேபோல, பங்கேற்பாளர்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கும் பட்சத்தில் பிறந்தநாள், காதுகுத்து, வளைகாப்பு போன்ற நிகழ்வுகளை ஆலயங்களில் தொடர்ந்து நடத்தலாம்.

இதையும் படிங்க : கொரோனா வைரஸ்; அனைத்து விசாக்களையும் ரத்து செய்தது இந்தியா..!

மேலும், பக்தர்கள் பிரசாதத்தை வீட்டிற்கு எடுத்துச் செல்ல ஏற்பாடு செய்யலாம். ஆலயத்திலேயே வழங்குவதாக இருந்தால் பக்தர்களுக்கு இடையே ஒரு மீட்டர் இடைவெளி இருப்பதை உறுதிசெய்ய வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதில் வெப்பமானிகள் மற்றும் கிருமித்தொற்றில் இருந்து பாதுகாக்க கிருமிநாசினிகள், சோப்புகள் உள்ளிட்டவை ஆலயங்களுக்கு வழங்கி இருப்பதாக வாரியம் தெரிவித்துள்ளது.

Source : Tamil Murasu

#SingaporeLatestTamilnews #Tamilnews #சிங்கப்பூர்தமிழ்செய்திகள் #Singaporetamil