மலேசியர்களின் கவனத்திற்கு….சிங்கப்பூரில் உள்ள மலேசிய தூதரகத்தின் முக்கிய அறிவிப்பு!

High Commission of Malaysia, Singapore
Photo: Google Maps

 

சிங்கப்பூரில் உள்ள மலேசிய தூதரகம் பயணிகளுக்கான முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

துறவி கொடுத்த லாட்டரிக்கான அதிஷ்ட எண்.. நம்பி வாங்கி கடனாளி ஆனதால் துறவியை தாக்கிய ஆடவர்

சிங்கப்பூருக்கான மலேசியா தூதரகம் (High Commission of Malaysia, Singapore) தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் (Facebook) பக்கத்தில் பிப்ரவரி 27- ஆம் தேதி வெளியிட்டுள்ள அறிவிப்பில், “பிப்ரவரி 27- ஆம் தேதி முதல் தூதரகத்தால் வழங்கப்படும் தூதரக சேவைகள், இறப்புப் பதிவு (Death Registration), பிறப்புப் பதிவு (Birth Registration), திருமணப் பதிவு (Marriage Registration), ஆவணச் சான்றொப்பம் (Document Attestation) மற்றும் பிற சேவைகள் உள்பட அனைத்து சேவைகளும் நாளொன்று 70 பேருக்கு மட்டுமே வழங்கப்படும்.

தூதரக சேவைகளைப் பெற விரும்புவோர் காலை 08.00 மணிக்கு மலேசிய தூதரகத்திற்கு வந்து அலுவலக வாசலில் உள்ள பாதுகாவலரிடம் வரிசை எண் கொண்ட டோக்கன்களைப் பெற்றுக் கொண்டு தூதரக சேவைகளைப் பெற்றுக் கொள்ளலாம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலைக்கு வந்த இடத்தில் இது தேவையா.. சமூக வலைத்தளத்தில் “வட்டிக்கு கடன்” என விளம்பரம் செய்த வெளிநாட்டவர்

கடந்த 2022- ஆம் ஆண்டு நிலவரப்படி, சிங்கப்பூரில் ஏறத்தாழ 1.13 மில்லியன் மலேசியர்கள் வசிக்கின்றதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றனர்.

மலேசிய தூதரகத்தின் அறிவிப்பால் மலேசியர்கள் தங்களது கவலையும், அதிருப்தியையும் தெரிவித்துள்ளனர்.