புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இந்திய தூதர், சிங்கப்பூர் அதிபரைச் சந்தித்தார்!

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இந்திய தூதர், சிங்கப்பூர் அதிபரைச் சந்தித்தார்!
Photo: Singapore President

 

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் இணைச் செயலாளராக இருந்த டாக்டர் ஷில்பக் என்.அம்புலே (Dr. Shilpak N. Ambule), சிங்கப்பூருக்கான இந்திய தூதராக (High Commissioner of India to the Republic of Singapore), கடந்த ஜூன் மாதம் 11- ஆம் தேதி அன்று நியமித்து, இந்திய அரசின் வெளியுறவுத்துறை அமைச்சகம் உத்தரவிட்டிருந்தது.

சிங்கப்பூர் சாலைகளில் செல்லும் நீங்கள் இந்த தவறை ஒருபோதும் செய்யாதீர்கள்: மீறிய வெளிநாட்டு ஊழியருக்கு S$4,800 அபராதம்

இதையடுத்து, இன்று (ஜூலை 25) சிங்கப்பூரில் உள்ள இந்திய தூதரகத்தில் சிங்கப்பூருக்கான இந்திய தூதராக டாக்டர் ஷில்பக் என்.அம்புலே பொறுப்பேற்றுக் கொண்டார். அதைத் தொடர்ந்து, இந்திய தூதரகத்தின் அதிகாரிகளுடன் அவர் கலந்துரையாடினார்.

பின்னர், இஸ்தானா மாளிகைக்கு சென்ற டாக்டர் ஷில்பக் என்.அம்புலே, சிங்கப்பூர் அதிபர் ஹலிமா யாக்கோப்பை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார். இந்த சந்திப்பின் போது, அவரது மனைவி உடனிருந்தார்.

சிங்கப்பூரில் உள்ள கோயில்களில் ஆடிப்பெருக்கு பூஜை நடைபெறும் என அறிவிப்பு!

கடந்த 2002- ஆம் ஆண்டு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தில் இணைந்த டாக்டர் ஷில்பக் என்.அம்புலே, பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார்.