இந்து அறக்கட்டளை வாரியமும், இந்து ஆலோசனை வாரியமும் இணைந்து நடத்திய தீபாவளி கொண்டாட்டங்கள்!

இந்து அறக்கட்டளை வாரியமும், இந்து ஆலோசனை வாரியமும் இணைந்து நடத்திய தீபாவளி கொண்டாட்டங்கள்!
Photo: Hindu Endowments Board

 

தீபாவளி பண்டிகையையொட்டி, சிங்கப்பூரின் இந்து அறக்கட்டளை வாரியமும் (Hindu Endowments Board), இந்து ஆலோசனை வாரியமும் (Hindu Advisory Board) இணைந்து, கடந்த நவம்பர் 20- ஆம் தேதி தேநீர் விருந்திற்கு ஏற்பாடு செய்திருந்தது. இந்த நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகரத்னம் கலந்து கொண்டார்.

சிங்கப்பூர் தமிழர்களின் இதய நாயகன்.. நிகரில்லா தலைவரின் 100வது பிறந்தநாள் நாணயம் – வெளிநாட்டு ஊழியர்கள் எப்படி பெறுவது?

இந்து அறக்கட்டளை வாரியமும், இந்து ஆலோசனை வாரியமும் இணைந்து நடத்திய தீபாவளி கொண்டாட்டங்கள்!
Photo: Hindu Endowments Board

தீபாவளி கொண்டாட்ட நிகழ்ச்சியில், முஸ்லிம், புத்த, கிறிஸ்துவ உள்ளிட்ட 10 மதங்களைச் சேர்ந்த முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் குதிரையாட்டம், பஞ்சாப் நடனம், பரதநாட்டியம் உள்ளிட்ட இந்திய பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிகளை பார்வையாளர்கள் கண்டு மகிழ்ந்தனர். அதைத் தொடர்ந்து, தீபாவளி பண்டிகையை விளக்கும் வகையிலான காட்சி அரங்குகளும் அமைக்கப்பட்டிருந்தனர். இதனை சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகரத்னம் நேரில் பார்வையிட்டார்.

சிங்கப்பூருக்கு படையெடுக்கும் இந்தியர்கள்: மலேசியா, ஆஸ்திரேலியை பின்னுக்கு தள்ளி இந்தியா முன்னிலை

நிகழ்ச்சியின் முடிவில் அனைவருக்கும் உணவு விருந்து அளிக்கப்பட்டது. இதில் இந்திய பாரம்பரிய உணவுகள் இடம் பெற்றிருந்தது. அதன் தொடர்ச்சியாக, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், சர்வமத தலைவர்கள், சிங்கப்பூர் அதிபருடன் குழு புகைப்படங்களை எடுத்துக் கொண்டனர்.