சிங்கப்பூருக்கு படையெடுக்கும் இந்தியர்கள்: மலேசியா, ஆஸ்திரேலியை பின்னுக்கு தள்ளி இந்தியா முன்னிலை

சாங்கி விமான நிலையத்தில் நடப்புக்கு வந்த புதிய சோதனை.. பிடிபட்ட பயணிகள் பலருக்கு அபராதம்

சிங்கப்பூருக்கு கடந்த அக்டோபர் மாதம் மட்டும் 94,332 இந்திய சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.

அதற்கு முந்தைய மாதத்தில் 81,014 ஆக இருந்த வருகை பதிவு அதிகரித்துள்ளதாக ஊடக அறிக்கை தெரிவித்துள்ளது.

சிங்கப்பூர் தமிழர்களின் இதய நாயகன்.. நிகரில்லா தலைவரின் 100வது பிறந்தநாள் நாணயம் – வெளிநாட்டு ஊழியர்கள் எப்படி பெறுவது?

சிங்கப்பூரில் கடை திருட்டில் ஈடுபட்ட 4 இந்தியர்களுக்கு சிறை – சிலர் சிங்கப்பூரை விட்டு எஸ்கேப்

சிங்கப்பூரின் மூன்றாவது பெரிய சுற்றுலாப் பயணிகள் ஆதாரமாக இந்தியா உள்ளது. அதாவது இது மலேசியா மற்றும் ஆஸ்திரேலியாவை பின்னுக்கு தள்ளியுள்ளது.

சிங்கப்பூர் பயணத்துறை கழகம் வெளியிட்ட சமீபத்திய தரவுகளில் இந்த புள்ளிவிவரங்கள் வெளியாகியுள்ளன.

அதே அக். மாதத்தில் சுமார் 88,641 சுற்றுலாப் பயணிகளின் வருகையுடன் மலேசியா நான்காவது இடத்தில் உள்ளது, செப்டம்பர் மாதத்தில் அது 89,384 ஆக இருந்தது.

88,032 சுற்றுலாப் பயணிகளின் வருகையுடன் ஆஸ்திரேலியா ஐந்தாவது இடத்தை பிடித்தது, முந்தைய மாதத்தில் இந்த வருகை 104,497 ஆக இருந்தது.

முதல் இடத்தை இந்தோனேசியா பிடித்துள்ளது. அக்டோபரில், அந்த நாட்டிலிருந்து 180,881 சுற்றுலாப் பயணிகள் சிங்கப்பூருக்கு வருகை தந்துள்ளனர். செப்டம்பரில் அது 175,601 ஆக இருந்தது.

இரண்டாம் பெரிய ஆதாரமாக சீனா இருக்கிறது, அக்டோபரில் 122,764 பயணிகள் வந்துள்ளனர், இது செப்டம்பரில் 135,677 ஆக இருந்தது.

பார்வையில்லா ஊழியரின் மசாஜ் கடை: வாரம் 7 நாளும் உழைப்பு.. உதவிக்கு யாரும் இல்லாமலும் உழைக்கும் சிங்கப்பூரின் இரும்பு மனிதர்