வசதிக் குறைந்த குடும்பங்களுக்கு உணவுப் பொட்டலங்களை விநியோகித்த தொண்டூழியர்கள்!

Photo: Hindu Endowments Board Official Facebook Page

ஏப்ரல் 30- ஆம் தேதி அன்று சிங்கப்பூரில் உள்ள ஒரு ஹாலில் இந்து அறக்கட்டளை வாரியத்தின் (Hindu Endowments Board) சமையல் கலைஞர்கள், சுமார் 2,100 பேருக்கு விநியோகிக்கக் கூடிய வகையில், வெஜிடேபிள் பிரியாணி (Vegetarian Briyani) மற்றும் உருளைக்கிழங்கு பொரியல், தவ்வு ஆகியவற்றை சமைத்தனர்.

சிங்கப்பூரில் இருந்து தமிழ்நாடு சென்ற ஊழியர் மரணம் – பயணத்துக்கு முன் செய்யவேண்டியது என்ன?

தரமான மற்றும் மிகுந்த சுவையுடன் சமைப்பட்ட உணவு, பின்னர் பேக்கிங் செய்யப்பட்டது. இந்த பணியில் சுமார் 30 சமூக மன்றங்களைச் சேர்ந்த 100 தொண்டூழியர்கள், இந்து அறக்கட்டளை வாரியத்தின் 50 தொண்டூழியர்கள் ஈடுபட்டனர்.

Photo: Hindu Endowments Board Official Facebook Page

உணவு பொட்டலங்களுடன், இனிப்புகள், காரப் பொட்டலங்களும் இணைத்து பேக்கிங் செய்யப்பட்டு, சிங்கப்பூர் முழுவதும் உள்ள வசதிக் குறைந்த குடும்பங்களுக்கு தொண்டூழியர்கள் விநியோகம் செய்தனர். சித்திரை திருநாளை கொண்டாடும் வகையில் பெரிய அளவில் உணவு விநியோகம் செய்யப்பட்டதாக இந்து அறக்கட்டளை வாரியம் தெரிவித்துள்ளது.

தொழிலாளர் தினம்- இஸ்தானாவில் குவிந்த பொதுமக்கள்…வரவேற்ற சிங்கப்பூர் அதிபர் ஹலிமா யாக்கோப்!

உணவுப் பொட்டலங்களை பொதுமக்கள் இன்ப முகத்துடன் பெற்றுக் கொண்டனர். இதனை இந்து அறக்கட்டளை வாரியம் தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.