தொழிலாளர் தினம்- இஸ்தானாவில் குவிந்த பொதுமக்கள்…வரவேற்ற சிங்கப்பூர் அதிபர் ஹலிமா யாக்கோப்!

Photo: President Of Singapore

நோன்புப் பெருநாள் மற்றும் தொழிலாளர் தினத்தைக் கொண்டாடும் வகையில், மே 1- ஆம் தேதி அன்று சிங்கப்பூரில் உள்ள இஸ்தானா மாளிகை பொதுமக்களுக்காகத் திறக்கப்பட்டது. காலை முதலே பொதுமக்கள் தங்களது குடும்பத்துடன் இஸ்தானாவுக்கு வரத் தொடங்கினர். அவர்களை சிங்கப்பூர் அதிபர் ஹலிமா யாக்கோப் மற்றும் அவரது கணவர் முகம்மது அப்துல்லா அல்ஹப்ஷியும் வரவேற்றனர்.

தன் குடும்பத்தை எப்படியாவது முன்னேற்றி விடுவோம் என ஓடிக்கொண்டிருக்கும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு வாழ்த்துக்கள்

இஸ்தானாவில் பொதுமக்களுக்காக பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் பொதுமக்களை வெகுவாகக் கவர்ந்தது. அதிக கூட்டம் காரணமாக, பொதுமக்கள் சுமார் 15 நிமிடத்திற்கு மேலாக நீண்ட வரிசையில் காத்திருந்து, பின்னர் இஸ்தானாவிற்குள் வந்தனர்.

Photo: President Of Singapore

இஸ்தானாவிற்கு வந்திருந்த பொதுமக்கள் சிங்கப்பூர் அதிபர் மற்றும் அவரது கணவருடன் குழு புகைப்படங்களையும் எடுத்து மகிழ்ந்தனர். பொதுமக்களின் வருகையால் இஸ்தானா விழாக்கோலம் பூண்டது என்றே கூறலாம்.

சிங்கப்பூரில் இருந்து தமிழ்நாடு சென்ற ஊழியர் மரணம் – பயணத்துக்கு முன் செய்யவேண்டியது என்ன?

இஸ்தானா ஆண்டுக்கு ஐந்து முறை மட்டுமே பொதுமக்களுக்குத் திறக்கப்படுவதால் கூட்டம் அதிகமாக இருந்ததாகக் கூறப்படுகிறது.