கோவிட்- 19 சம்பவத்தால் பிரபல உணவகம் தற்காலிகமாக மூடல்!

Photo: Hjh Maimunah Restaurants

 

சிங்கப்பூரில் கடந்த சில நாட்களாக கோவிட்- 19 நோய்த்தொற்றால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக, ஈரச்சந்தைகள், உணவங்காடிகளிலும் கோவிட்- 19 நோய்த்தொற்று குழுமங்கள் அடையாளம் காணப்பட்டு, தற்காலிகமாக மூடப்பட்டு வருகிறது. மேலும், அங்கு பணியாற்றும் ஊழியர்கள் உள்பட அனைவரும் கோவிட்- 19 மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும், வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதிகளிலும் நோய்த்தொற்று குழுமங்கள் அதிகளவில் அடையாளம் காணப்பட்டுள்ளன. சுகாதாரத்துறை அமைச்சகமும் கொரோனா பரிசோதனையைத் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதேபோல், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் கூட்டத்தில் பங்கேற்க நியூயார்க் சென்ற சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சர்!

இந்த நிலையில், சிங்கப்பூரில் உள்ள பிரபல ‘நாசி படாங்’ (Nasi Padang) உணவு வகையை விற்கும் உணவகம் ‘ஹெச்ஜேஹெச் மைமுனா’. இந்த உணவகத்தின் கிளைகள் ஜலான் பிசாங் (Jalan Pisang), சிட்டி ஸ்கொயர் (City Square Mall), டம்பைன்ஸ் மால் (Tampines Mall), ஹாங் லியோங் கட்டிடம் (Hong Leong Building) மற்றும் ஜூ சியாட் (Joo Chiat) ஆகிய ஐந்து இடங்களில் செயல்பட்டு வருகின்றன. மேலும், இந்த உணவகம் கேட்டரிங் சேவைகளையும் செய்து வருகிறது.

இந்த உணவகம் செப்டம்பர் 21- ஆம் தேதி அன்று தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில், “எங்கள் விற்பனை நிலையங்களில் ஒரு கோவிட் தொடர்பான சம்பவம் காரணமாக, மறு அறிவிப்பு வரும் வரை ‘ஹெச்ஜேஹெச் மைமுனா’ (Hjh Maimunah Restaurant) உணவகத்தின் கிளைகள் அனைத்தும் தற்காலிகமாக மூடப்படுகிறது. உணவகங்கள் மீண்டும் திறக்கப்படும் நாள் குறித்த அறிவிப்பு வெளியாகும் வரை உணவகத்தின் கிளைகள் மூடப்பட்டிருக்கும்.

“சிங்கப்பூர், திருச்சி இடையே கூடுதல் விமானச் சேவை”- ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் அறிவிப்பு!

சமீபத்தில் ‘ஹெச்ஜேஹெச் மைமுனா’ விற்பனை நிலையங்களுக்கு வருகை தந்த வாடிக்கையாளர்கள் அவர்களின் உடல்நிலையை உன்னிப்பாகக் கண்காணிக்க வேண்டும். உணவகங்களை மூடுவது பாதுகாப்பு நடவடிக்கையாகும். வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்கள் ஆகியோரின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு ‘ஹெச்ஜேஹெச் மைமுனா’ உணவகத்தின் அனைத்து கிளைகளும் நன்கு சுத்தம் செய்யப்பட்டு, கிருமிநாசினி தெளிக்கப்படும்.

வாடிக்கையாளர்கள் முன்கூட்டியே செய்த ஆர்டர்கள் அனைத்தும் ரத்துச் செய்யப்படுகிறது. ஆர்டர் செய்தபோது செலுத்திய தொகை வாடிக்கையாளர்களுக்கு திருப்பி வழங்கப்படும். நாங்கள் இப்போதைக்கு எந்த ஆர்டர்களையும் எடுக்க மாட்டோம். வாடிக்கையாளர்களுக்கு ஏற்படும் சிரமங்களுக்கு மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறோம். அவர்களின் ஆதரவுக்கு நன்றி” என்று தெரிவித்துள்ளது.