“கோயிலுக்கு வரும்போது முகக்கவசம் அணியுமாறு பக்தர்களுக்கு புனித மரம் ஸ்ரீ பாலசுப்பிரமணியர் கோயில் நிர்வாகம் அறிவுறுத்தல்!”

கார்த்திகை தீபத்திருவிழா: 'புனித மரம் ஸ்ரீ பாலசுப்பிரமணியர் கோயிலில் சிறப்பு பூஜை நடைபெறும்' என அறிவிப்பு!
Photo: Holy Tree Sri Balasubramaniar Temple

 

சிங்கப்பூரில் கோவிட்-19 நோய்த்தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், கூட்டமான இடங்களுக்கு செல்லும் போது, பொதுமக்கள் முகக்கவசங்களை அணிய வேண்டும் என்று சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. மேலும், நோய்த்தொற்று பரவலைத் தடுக்க, சுகாதாரத்துறை அமைச்சகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

சாங்கி விமான நிலையத்தில் இனி புதிய சோதனை: வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் கவனத்திற்கு!

அந்த வகையில், சிங்கப்பூரில் உள்ள பிரசித்திப் பெற்ற முருகன் கோயில்களில் ஒன்றான புனித மரம் ஸ்ரீ பாலசுப்பிரமணியர் கோயில் நிர்வாகம் பக்தர்களுக்கான முக்கிய அறிவிப்பு ஒன்றை அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

அதில், “சிங்கப்பூரில் கோவிட்-19 சம்பவங்கள் அதிகரித்து வருவதால், பக்தர்கள் அனைவரும் கோயிலுக்கு வரும்போது முகக்கவசம் அணியுமாறு புனித மரம் ஸ்ரீ பாலசுப்பிரமணியர் கோயில் (Holy Tree Sri Balasubramaniar Temple) நிர்வாகம் அன்புடன் கேட்டுக் கொள்கிறது.

‘வைகுண்ட ஏகாதசி விழா 2023’- ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு!

உங்களுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டாலோ, அல்லது ஏதேனும் அறிகுறிகள் தென்பட்டாலோ, நீங்கள் வீட்டிலேயே இருந்து, உங்கள் ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்கள் குறித்த உங்களது ஒத்துழைப்பை நாடுகிறோம். அவற்றைக் கடைப்பிடிப்பதன் மூலம், நமது கோயிலுக்கு வரும் ஒவ்வொரு பக்தரின் ஆரோக்கியத்தையும், நலனையும் பாதுகாக்கிறோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.