‘புனித மரம் ஸ்ரீ பாலசுப்பிரமணியர் கோயிலில் மஹா லக்ஷ்மி பூஜை 2024!’

'புனித மரம் ஸ்ரீ பாலசுப்பிரமணியர் கோயிலில் மஹா லக்ஷ்மி பூஜை 2024!'
Photo: Google Maps

 

சிங்கப்பூரில் உள்ள புனித மரம் ஸ்ரீ பாலசுப்பிரமணியர் கோயிலில் (Holy Tree Sri Balasubramaniar Temple) வரும் மார்ச் 16- ஆம் தேதி மஹா லக்ஷ்மி பூஜை 2024 (Maha Lakshimi Poojai 2024) நடைபெறும் என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

சுற்றுலா பயணி செய்த செயல்.. பெண் கொடுத்த புகார் – உடனே தூக்கிய போலீஸ்

சிங்கப்பூரில் யிஷுன் இண்டஸ்ட்ரீல் பார்க் ஏ- வில் (10 Yishun Industrial Park A) அமைந்துள்ளது புனித மரம் ஸ்ரீ பாலசுப்பிரமணியர் கோயில் (Holy Tree Sri Balasubramaniar Temple). இந்த கோயிலில் வரும் மார்ச் 16- ஆம் தேதி சனிக்கிழமை அன்று மஹா லக்ஷ்மி பூஜை 2024 நடைபெறுகிறது.

இந்த விஷேச பூஜையில் கலந்து கொள்ளவிருக்கும் பக்தர்கள் கோயிலில் 51 வெள்ளி கட்டணத்தைச் செலுத்திக் கலந்து கொள்ளலாம். பூஜையில் கலந்து கொள்ளும் பக்தர்கள் ஒரு காமாட்சி விளக்கையும், பஞ்சபாத்திரத்தையும் கொண்டு வர வேண்டும். பூஜையில் பங்கேற்க கட்டணம் செலுத்திய பக்தர்களுக்கு மஞ்சள், குங்குமம், தட்டு, 1 மஹா லக்ஷ்மி விக்ரம், 1 புடவை, வாழைப்பழம், ஆப்பிள், ஆரஞ்சு, வளையல்கள், வெற்றிலை, பாக்கு, பூ, ஊதுவத்தி, எண்ணெய், விளக்கு திரி, பிரசாதம் வழங்கப்படும்.

சிங்கப்பூரில் அதிக அளவில் குவியும் சுற்றுலாப் பயணிகள்

மார்ச் 16- ஆம் தேதி அன்று காலை 09.00 மணி முதல் காலை 11.30 மணி வரை பூஜைகள் நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.