சிங்கப்பூரில் அதிக அளவில் குவியும் சுற்றுலாப் பயணிகள்

சுற்றுலாப் பயணிகள்
Yesheng Liang/Unsplash

சிங்கப்பூரில் கடந்த பிப்ரவரி மாதம் மட்டும் மொத்தம் 326,970 சீன சுற்றுலாப் பயணிகள் வந்ததாக சிங்கப்பூர் சுற்றுலா கழகத்தின் (STB) புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

கடந்த 2023 ஆம் ஆண்டு பிப். மாதத்தோடு ஒப்பிடுகையில், சிங்கப்பூருக்கு வந்த சீன சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை விட இது எட்டு மடங்கு அதிகமாகும்.

சுற்றுலா பயணி செய்த செயல்.. பெண் கொடுத்த புகார் – உடனே தூக்கிய போலீஸ்

கடந்த பிப்ரவரி 9 முதல் நடைமுறைக்கு வந்த இரு நாடுகளுக்கும் இடையிலான 30 நாள் விசா இல்லா பயண ஏற்பாடும் இதற்கு காரணமாக இருக்கலாம் என சொல்லப்பட்டுள்ளது.

அதைத் தொடர்ந்து, இந்தோனேசியா (190,760 பயணிகள்), மலேசியா (100,200 பயணிகள்), ஆஸ்திரேலியா (79,570 பயணிகள்) மற்றும் UK (69,920 பயணிகள்) ஆகிய நாடுகள் உள்ளன.

மொத்தத்தில், இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் மட்டும் உலகம் முழுவதும் சுமார் 1.44 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை சிங்கப்பூர் வரவேற்றுள்ளது.

அவர்கள் சராசரியாக 3.46 நாட்கள் இங்கு தங்கியிருந்ததாகவும் சொல்லப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் TOTO குலுக்களில் ஜாக்பாட் “முதல் பரிசு S$10 மில்லியன்” – அதிஷ்டம் இருந்தால் கோடீஸ்வரன் தான்