தனிமைக்கான செலவு அதிகம்.. திரும்ப வர முடியுமோ.. என்ற பல கவலைகளுடன் சொந்த நாட்டுக்கு செல்ல தயங்கும் ஊழியர்கள்!

singapore air-ticket-prices-up-departing-flights
Pic: File/Reuters

வீட்டுத் தனிமைப்படுத்தலுக்கு விண்ணப்பித்தவர்களில் கால் பகுதிக்கும் குறைவானவர்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாகக் மலேசிய சுகாதாரத் துறை அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஆகஸ்ட் 10 நிலவரப்படி, சுமார் 20,000 பேர் வீட்டு தனிமைப்படுத்தலுக்கு விண்ணப்பித்துள்ளனர். இருப்பினும், அனைவருக்கும் வீட்டு தனிமைப்படுத்தலுக்கு அனுமதி வழங்கவில்லை என்றும் அமைச்சர் கூறினார்.

சாலையில் நிர்வாணமாக நடந்து சென்ற ஆடவர் கைது (காணொளி)

இருப்பினும், சிங்கப்பூரில் இருக்கும் மலேசியர்கள் சிலர் சொந்த நாட்டுக்கு செல்ல தயங்குவதாக கூறப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் துரியன் விற்கும் விற்பனையாளர் லூயிஸ் லீ, தனது மனைவியையும் இரண்டு இளம் குழந்தைகளையும் பார்த்து ஒரு வருடம் ஆவதாக குறிப்பிட்டுள்ளார்.

கோவிட் -19 தொற்றுநோய் காரணமாக நீண்டகால கால எல்லை மூடல்களால் சிக்கித் தவிக்கும் ஆயிரக்கணக்கான மலேசியர்களில் 31 வயதான இவரும் ஒருவர்.

தனிமைப்படுத்தல் செலவுகள் காரணமாக, அவர் தனது குடும்பத்தைப் பார்க்கச் செல்வதை தவிர்த்ததாக லீ, சிஎன்ஏவிடம் கூறினார்.

மலேசியாவுக்கு வந்தவுடன் தனிமை, உணவுக்காக குறைந்தது RM2,100 (S$680) ஆகும் செலவை சேமித்துக்கொள்வேன் என்றும் அவர் விளக்கினார்.

குடும்பத்தினரை பார்க்க முடியும் என்று நம்பிக்கை தெரிவித்த ஊழியர், மனைவி அவரை பிரிந்து வாடுவதாகவும், அவர் வீட்டை விட்டு நீண்ட காலம் சிங்கப்பூரில் தங்கிருப்பதால், மனைவி கவலை கொண்டுள்ளதாகவும் கூறினார்.

மேலும் சிலர், மலேசியா சென்றால் திரும்ப சிங்கப்பூர் வர முடியதாக சூழ்நிலை ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்திலும், சொந்த நாட்டுக்கு செல்ல தயக்கம் காட்டுகின்றனர்.

சிங்கப்பூர் ஆற்றில் நீந்தச் சென்று உயிரிழந்த இந்தியர்