கொரோனா பாதிப்பு: பிரபல Home’s Favourite பேக்கரி ஆகஸ்ட் 12 வரை மூடல்.!

Homes favourite bakkery closure
Pic: Home's Favourite

சிங்கப்பூரில் உள்ள ஜூரோங் Food Hub வளாகத்தில் அமைந்துள்ள Home’s Favourite எனும் பேக்கரி அடுத்த மாதம் 12ம் தேதி வரை மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜூரோங் Food Hub வளாகத்தில் உள்ள 6 மாடித் தொழிற்சாலைக் கட்டிடத்தின், 4வது மாடியில் Home’s Favourite பேக்கரி உள்ளது.

சொந்த நாட்டுக்கு திரும்பிய வெளிநாட்டு ஊழியர்களால் மொத்த வேலைவாய்ப்பு சரிவு

Home’s Favourite பேக்கரியில் கிருமித்தொற்று குழுமம் அடையாளம் காணப்பட்டதை அடுத்து அந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

Home’s Favourite பேக்கரியுடன் தொடர்புடைய 6 பேருக்குக் கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கு கிருமித்தொற்று எவ்வாறு ஏற்பட்டது என்று குறித்து இன்னும் தெரியப்படவில்லை.

அந்த பேக்கரியில் உள்ள ஊழியர்கள் 30 பேர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.

ஜூரோங் Food Hub வளாகத்தில் பொது இடங்களில் கிருமிநீக்கம் பணிகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் நோய்ப்பரவல் குழுமங்களின் எண்ணிக்கை 53ஆக அதிகரிப்பு