சிங்கப்பூர் பயணிகள் விமானத்திற்கு தடை விதித்த நகரம்

(Photo: Reuters)

சிங்கப்பூரிலிருந்து செல்லும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (SIA) பயணிகள் விமானங்கள் இன்று (ஏப்ரல் 3) முதல் ஏப்ரல் 16 வரை ஹாங்காங்கில் தரையிறங்க அனுமதிக்கப்படாது என்று ஹாங்காங் அரசு தெரிவித்துள்ளது.

ஹாங்காங் அரசு தெரிவிக்கும் COVID-19 பாதிப்பு தொடர்பான தினசரி செய்திக்குறிப்பில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சிங்கப்பூரில் ஏப்ரல் முதல் இரண்டு வாரங்களின் வானிலை எப்படி இருக்கும்?

விதிமுறைகளை மீறும் பட்சத்தில் விமானச் சேவை செய்யும் நிறுவனங்களுக்கு தடை விதிக்கப்படும் என அந்நகரின் ஒழுங்குமுறை சட்டம் கூறுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் 31 அன்று சிங்கப்பூரிலிருந்து ஹாங்காங்கிற்கு சென்ற பயணி ஒருவருக்கு COVID-19 இருப்பது உறுதி செய்யப்பட்டதாக வெள்ளிக்கிழமை செய்திக்குறிப்பில் ஹாங்காங் அரசு தெரிவித்தது.

கூடுதலாக, மூன்று பயணிகள் நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு ஒழுங்குமுறை நடவடிக்கைகளை மீறியதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மூன்று பயணிகளின் விதிமீறல்கள் குறித்து சி.என்.ஏ ஹாங்காங்கின் சுகாதாரத் துறையிடம் விளக்கம் கோரியுள்ளது.

போதைப்பொருள், போக்குவரத்து விதிமீறல் – தப்பியோடிய ஆடவர் கைது