சிங்கப்பூரில் ஏப்ரல் முதல் இரண்டு வாரங்களின் வானிலை எப்படி இருக்கும்?

சிங்கப்பூரில் இந்த மாதத்தின் அடுத்த வாரங்களில் இடியுடன் கூடிய மழையை எதிர்பார்க்கலாம் என சிங்கப்பூர் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஏப்ரல் முதல் இரண்டு வாரங்களில், சிங்கப்பூரின் பெரும்பாலான பிற்பகல்களில் இடி, மின்னலுடன் கூடிய குறுகிய கால மிதமானது முதல் பலத்த மழை எதிர்பார்க்கப்படுகிறது.

வேலையிடத்திற்கு திரும்பும் ஊழியர்களுக்கு இரு வகையான வேலைமுறைகள் வலியுறுத்தல்!

சில நாட்களில், பலத்த காற்று வீசும் என்பதால், இடியுடன் கூடிய மழை அதிகாலை வரை நீடிக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

ஒட்டுமொத்தமாக, ஏப்ரல் முதல் இரண்டு வாரங்களுக்கு மழைப்பொழிவு தீவின் பெரும்பாலான பகுதிகளில் கிட்டத்தட்ட இயல்பு நிலையில் இருக்கும் என்றும் அது தெரிவித்துள்ளது.

காலநிலை அடிப்படையில், ஏப்ரல் மாதம் இந்த ஆண்டின் வெப்பமான மாதங்களில் ஒன்றாகும்.

வெப்பநிலை பெரும்பாலான நாட்களில் 25 டிகிரி செல்சியஸ் முதல் 34 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இருப்பினும், சில நாட்களில் தினசரி அதிகபட்ச வெப்பநிலை சுமார் 35 டிகிரி செல்சியஸை எட்டக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது.

உலகின் முதல் 50 ஸ்மார்ட் சிட்டி அரசாங்கங்களின் தரவரிசையில் சிங்கப்பூர் முதலிடம்!