வேலையிடத்திற்கு திரும்பும் ஊழியர்களுக்கு இரு வகையான வேலைமுறைகள் வலியுறுத்தல்!

(PHOTO: The Business Times)

வேலையிடத்திற்கும் அலுவலகத்திற்கும் திரும்பும் பெரும்பான்மையான ஊழியர்களுக்கு நீக்குப்போக்கு வேலைமுறைகளை நிறுவனங்கள் ஏற்படுத்த வேண்டும் என்று பிரதமர் அலுவலக அமைச்சர் இந்திராணி ராஜா கேட்டுக்கொண்டுள்ளார்.

கோவிட்-19 கட்டுபாடுகள் தளர்த்தப்படும் இந்த நிலையில் ஊழியர்கள் வெவ்வேறு சூழல்களில் பணிபுரியும் வாய்ப்புகள் கொடுப்பது பற்றி நிறுவனங்கள் எண்ண வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

உலகின் முதல் 50 ஸ்மார்ட் சிட்டி அரசாங்கங்களின் தரவரிசையில் சிங்கப்பூர் முதலிடம்!

ஊழியர்கள் தங்களது குழந்தைகள் மற்றும் பெற்றோர்களையும் கவனிப்பதற்காக போதுமான நேரம் மற்றும் வாய்ப்புகளை நிறுவனங்கள் அவர்களுக்கு வழங்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், ஊழியர்கள் வீடு மற்றும் அலுவலகங்களில் மாறி மாறி வேலை செய்யும் வகையில் ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

சிங்கப்பூரில் ஒட்டுமொத்த பிறப்பு விகிதம் குறைந்து இருப்பதாக எஸ்ஐஐஏ என்னும் சர்வதேச விவகாரங்களுக்கான சிங்கப்பூர் நிறுவனம் நடத்திய கருத்தரங்கில் அமைச்சர் இந்திராணி தெரிவித்துள்ளார்.

ஊழியர்களுக்கு தங்கள் குடும்பத்தை கவனிக்க போதுமான நேரம் கொடுத்து நீக்குப்போக்கு முறையில் நிறுவனங்கள் நடந்து கொள்ள வேண்டும் என்றும்
அமைச்சர் கூறியுள்ளார்.

அதிகமான ஊழியர்கள் வேலைக்கு திரும்புவதில் முதலாளிகளுக்கு அதிக மகிழ்ச்சிகள் ஏற்படும், இதை நிறுவனங்கள் சிந்தித்து இரு வகையான வேலை முறைகள் ஏற்படுத்துவது சிறப்பு என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

சாலையின் நடுவில் நிர்வாணமாக படுத்து கிடந்த ஆடவர் கைது