சிங்கப்பூர் சாலையில் சுற்றித்திரிந்த மலைப்பாம்பு (காணொளி) – பாதுகாத்த ஓட்டுநர்

huge snake at North Buona Vista Road
huge snake at North Buona Vista Road ( Avtar Sandhu/Facebook)

சிங்கப்பூரில் இன்று (அக். 30) அதிகாலை 3:55 மணிக்கு, SBS பேருந்து ஓட்டுநர் வேலைக்குத் தயாராகிக்கொண்டிருந்தார். அப்போது சாலையில் மிகப்பெரிய பாம்பு ஒன்று கடப்பதை கண்டார்.

Singapore Wildlife Sighting என்ற ஃபேஸ்புக் குழுவில் நடந்த சம்பவத்தைப் பகிர்ந்துகொண்ட அவ்தர் சந்து (Avtar Sandhu) என்ற அவர், சாலையில் முன்னால் ஏதோ இருப்பதைக் முதலில் கவனித்ததாக கூறினார்.

சிங்கப்பூருக்குள் நுழையும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு – இலகுவான பயணத்திற்கு அறிவுரை

அந்த நேரத்தில், அவர் North Buona Vista சாலையில் பேருந்தை ஓட்டிக்கொண்டிருந்தார், அப்போது அதனை கண்ட அவர், அது ஏதேனும் லாரிகளில் இருந்து கீழே விழுந்த பொருள் என்று நினைத்தார்.

இருப்பினும், அவர் அதனை நெருங்கிய கடைசி நிமிடத்தில் தான் உண்மை தெரிந்தது, அது பொருள் அல்ல, பெரிய பாம்பு என்று. பின்னர் அவர் உடனடியாக பேருந்தை நிறுத்தினார்.

பின்னர் அவர், பேருந்தின் அடியில் சென்ற அதனை சோதனை செய்ய பின்-கதவு வழியாக பேருந்தை விட்டு விட்டு வெளியேறினார்.

அதையடுத்து அதை கண்ட அவர், அது ஒரு மலைப்பாம்பு என்றார்.

பாம்பின் மேல் பேருந்தை ஏற்றாமல் கருணை காட்டியதற்காக அவருக்கு பலர் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.

காணொளி: www.facebook.com/avtar.sandhu.

லிட்டில் இந்தியாவில் தீபாவளி விற்பனை மந்தம்; கூட்டம் அதிகம் இல்லை – கடைக்காரர்கள் கவலை