சிங்கப்பூருக்குள் நுழையும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு – இலகுவான பயணத்திற்கு அறிவுரை

தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கான பயணத் திட்டத்தின்கீழ் (VTL) சிங்கப்பூருக்குள் நுழையும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், குடிநுழைவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணையம் (ICA) அதன் செயல்முறைகளை மேம்படுத்த முயற்சித்துள்ளது என்று உள்துறை அமைச்சர் கே.சண்முகம் நேற்று (அக். 29) தெரிவித்தார்.

லிட்டில் இந்தியாவில் தீபாவளி விற்பனை மந்தம்; கூட்டம் அதிகம் இல்லை – கடைக்காரர்கள் கவலை

பயணிகளுக்கான மற்ற குடிநுழைவு வருகை அரங்குகளைப் பயன்படுத்துவது குறித்து சாங்கி விமான நிலையத்துடன் இணைந்து செயல்படுவதாகக் ICA கூறியது.

விமான நிலையத்திற்குச் சென்றதைத் தொடர்ந்து, திரு சண்முகம் கூறியதாவது; சிங்கப்பூருக்குள் நுழையும் பயணிகளுக்கான தாமதங்கள் குறித்த புகார்களுக்கான தீர்வுவுகள் பற்றி பேசினார்.

சிங்கப்பூருக்கு வருவதற்கு முன், தேவையான தகவல்களை ஆன்லைனில் சமர்ப்பிக்கும் பயணிகளுக்கு நுழைவு செயல்முறை இலகுவாக இருக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.

Work permit அனுமதி பெற்ற இந்திய ஊழியருக்கு ஒன்பது வார சிறைத்தண்டனை