மனைவியைக் கடத்திக் கொல்ல முயன்ற கணவருக்கு சிறை!

(Photo: TODAY)

சிங்கப்பூரில் வசித்து வந்த தம்பதி முருகன் நொண்டா (வயது 39) – கிருஷ்ணவேணி (வயது 40). கடந்த 2007- ஆம் ஆண்டு இவர்களுக்கு திருமணம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, தம்பதி ஜோகூர் பாருவில் வசித்து வந்தனர். திருமணமான சில மாதங்களில் முருகன் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளார். இதனால், குடித்துவிட்டு வீட்டுக்கு செல்லும் முருகன், தனது மனைவியை அடித்து துன்புறுத்தியதாகக் கூறப்படுகிறது. மேலும், சூதாட்டப் பழக்கத்தால் கடனாளி ஆனார்.

பின்னர், மனைவிக்கு வேறொரு நபருடன் தகாதத் தொடர்பு வைத்திருந்ததாக முருகன் சந்தேகப்பட்டார். ஆனால், அதை முற்றிலும் மறுத்த கிருஷ்ணவேணி, கணவரிடமிருந்து பிரிந்து விவாகரத்துக்கு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

சிங்கப்பூரில் புதிதாக 3 தொற்றுக் குழுமங்கள் வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதியில் அடையாளம்

இதையடுத்து, முருகன் தனது மனைவியை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டார். பலமுறை அழைத்தும் மனைவி வீட்டிற்கு வராததால், கோபமடைந்த முருகன், மனைவியிடம் உன்னை கடத்திச் சென்று பெட்ரோல் ஊற்றி எரித்துவிடுவதாகவும், பின்னர் தானும் தற்கொலை செய்துவிடுவதாகவும் கூறியுள்ளார்.

இந்த நிலையில், கிருஷ்ணவேணியின் கணவர் மிரட்டியதை அறிந்த அவரது உறவினர்கள் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். இதனிடையே, கடந்த 2019- ஆம் ஆண்டு ஜூலை 2- ஆம் தேதி அன்று இரவு 11.00 மணியளவில் முருகன் தனது மனைவி கிருஷ்ணவேணியை காரில் கடத்திக் கொண்டு துவாஸ் சோதனைச் சாவடியில் கடக்க முயன்றார். அப்போது, காரை வழிமறித்து நிறுத்திய காவல்துறையினர், கிருஷ்ணவேணியை மீட்டு, முருகனை அதிரடியாக கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தினர்.

மேலும், சம்பவம் குறித்து முருகன் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். விசாரணைக்கு பின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர், 2019- ஆம் ஆண்டு ஜூலை 4- ஆம் தேதி அன்று நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டார்.

சிங்கப்பூரில் அதிகரிக்கும் தொற்று பாதிப்பு… இவர்கள் வெளியே வர வேண்டாம் என கடும் ஊக்குவிப்பு

இது தொடர்பான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அந்த வகையில், இவ்வழக்கு நேற்று முன்தினம் (29/09/2021) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, முருகன் காணொளி மூலம் நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டார். அதைத் தொடர்ந்து, அவர் தான் செய்த குற்றத்தை ஒப்புக் கொண்டார்.

இதையடுத்து, அவருக்கு இரண்டு ஆண்டுகள், இரண்டு மாதம், ஆறு வாரச் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். தற்போது முருகன் சிறையில் இருக்கும் நிலையில், அதனை தண்டனைக் காலமாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டால் விரைவில் அவர் விடுவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.