தன் மனைவியையே கொல்ல முயன்ற கணவனுக்கு, 2 ஆண்டுகளுக்கு மேல் சிறைத் தண்டனை!

2007 ஆம் திருமணம் செய்து கொண்ட முருகன் மற்றும் கிருஷ்ணவேணி ஜோகூர் பாருவில் வசித்து வந்தனர்.ஆனால் சில நாட்களிலேயே முருகனுக்கு திருமண வாழ்வு வெறுத்துவிட்டது.

முருகன், மனைவியை அடித்துத் துன்புறுத்தினார் என்றும் சூதாடும் பழக்கத்தால் கடனாளி ஆனார் என்றும் கூறப்பட்டது. பிறகு மனைவி வேறு ஆணுடன் கள்ளத்தனமாக தொடர்பு வைத்திருப்பதாக முருகன் சந்தேகப்பட்டார்.

சிங்கப்பூரில் புதிதாக 3 தொற்றுக் குழுமங்கள் வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதியில் அடையாளம்

ஆனால் கிருஷ்ணவேணி அதை மறுத்து, தன் கணவரிடமிருந்து பிரிந்து விவாகரத்திற்கு விண்ணப்பித்தார்.

முருகன், தன்னைவிட்டுப் பிரிந்து சென்ற மனைவியை சமாதானம் பேச பலமுறை அழைத்தும் வராததால், தன் மனைவியை கடத்திச்சென்று பெட்ரோல் ஊற்றி எரித்துவிடுவதாக அவர் மிரட்டியுள்ளார்

மேலும் முருகன், மனைவியை எரித்துவிட்டு தானும் தற்கொலை செய்துக்கொள்ளப் போவதாக மனைவியிடம் பயமுறுத்தியுள்ளார்.

2019 ஜூலை 2ஆம் தேதி இரவு 11 மணியளவில் துவாஸ் சோதனைச் சாவடியைக் கடந்து செல்ல முயலும் போது போலிசார் முருகனை கைது செய்தனர். கடத்தப்பட்ட அவரது மனைவியான கிருஷ்ணவேணியை போலிசார் மீட்டெடுத்தனர்.

மலேசியத் தம்பதியரான அவர்கள், அந்தச் சமயத்தில் ஜோகூர்பாருவுக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். திருமதி கிருஷ்ணவேணியின் உறவினர் ஒருவர் முன்கூட்டியே கணவரின் திட்டத்தை போலிசுக்குத் தெரிவித்திருந்தார்.

சிங்கப்பூர் மாவட்ட நீதிமன்றத்தில் காணொளிக் காட்சிமூலம் முன்னிலைப்படுத்தப்பட்ட முருகன் கடத்தல் மற்றும் மிரட்டல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளைக் ஒப்புக்கொண்டுள்ளார்.

தற்போது 40 வயதாகும் முருகன் நண்டோவுக்கு 2 ஆண்டுகள், 2 மாதம், ஆறு வாரச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கோவிட்-19 தாெற்று காலத்தில் பெரிதும் உதவிய முதலாளிகள் & பணிப்பெண்களுக்கு விருது!