தபால் நிலையங்களில் சிங்கப்பூர் பாஸ்போர்ட், அடையாள அட்டைகளை பெறுவதற்கான கூடுதல் கட்டணம் தள்ளுபடி

Singapore Passport
(Photo: ANI/Twitter)

தபால் நிலையங்களில், சிங்கப்பூர் பாஸ்போர்ட் மற்றும் அடையாள அட்டைகளை (IC) பெறுவதற்கான கூடுதல் கட்டணத்தை குடிநுழைவு மற்றும் சோதனைச் சாவடி ஆணையம் (ICA) தள்ளுபடி செய்யும் என்று தெரிவித்துள்ளது.

அடுத்த மாதம் அக்டோபர் 1ஆம் தேதி முதல் குறிப்பிடப்பட்ட 27 தபால் நிலையங்களில் அது நடைமுறைப்படுத்தப்படும் என்று ஆணையம் இன்று (செப் 22) தெரிவித்துள்ளது.

சிங்கப்பூரில் கொரோனாவால் மேலும் 3 பேர் மரணம்

தற்போது, ​​சிங்கப்பூரர்கள் மற்றும் நிரந்தரவாசிகள் இந்த சேவைக்காக S$6 முதல் S$12 வரை SingPost-ல் செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

பொதுமக்களுக்கு கூடுதல் வசதியை ஏற்படுத்தி கொடுக்கும் நோக்கத்துடனும், அதிகமான மக்கள் தங்கள் சிங்கப்பூர் பாஸ்போர்ட் மற்றும் IC அட்டைகளை நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் பெற்றுக்கொள்ள ஊக்குவிப்பதற்கும், அதற்கு ஆகும் செலவை ICA ஏற்கும் என்று கூறியுள்ளது.

இருப்பினும், சில குடியிருப்பாளர்கள் தங்கள் ஆவணங்களை ICA கட்டிடத்தில் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அது கூறியுள்ளது.

தகுதியான குடியிருப்பாளர்கள் ICAவின் இ-அப்பாயிண்ட்மென்ட் போர்ட்டலில் பதிவு செய்து தங்களுக்கு விருப்பமான தபால் நிலையங்களில் பெற்றுக்கொள்ளலாம்.

தேந்தெடுக்கப்பட்ட தபால் நிலையங்களின் பட்டியலை SingPostன் இணையதளத்தில் காணலாம்.

பொய்யான தகவல்கள் மூலம் “Work Pass” அனுமதி பெற முயற்சி – 18 பேர் கைது