விரும்பிய போட்டோவை வெறும் S$0.50 க்கு பிரிண்ட் எடுக்கலாம் – IKEA அலெக்ஸாண்ட்ரா அமைத்துள்ள சுவர் போட்டோபூத்

IKEA Alexandra photobooth prints
Photos by Livia Soh

IKEA அலெக்ஸாண்ட்ராவிற்கு நீங்கள் சென்றிருந்தால் அதன் முதல் தளத்தில் அமைந்துள்ள சுவர் அலங்காரப் பிரிவில் நீண்ட வரிசையை பார்த்துருப்பீர்கள்.

அது வேறொன்றும் இல்லை, அங்கு நமக்கு பிடித்தாற்போல புகைப்படம் எடுத்து அதனை அச்சிடவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ரொட்டி வாங்க காசு இல்லாமல் தவித்த வெளிநாட்டு பணிப்பெண்… ரொட்டியுடம் பணத்தையும் அள்ளிப்போட்டு கொடுத்த பெண்மணி

இளைஞர்கள் அதனை ஃபோட்டோபூத் என்று அழைக்கின்றனர், அது கடையின் சுவரில் அமைந்துள்ளது.

நீங்கள் அந்த திரைக்கு முன் சென்ற பிறகு, உங்களுக்கு பிடித்தவாறு புகைப்படம் எடுக்கலாம் அல்லது ஏற்கனவே உள்ள புகைப்படத்தை அச்சிடலாம்.

பெரும்பாலான மக்கள் ஏற்கனவே உள்ள புகைப்படங்களை தேர்வு செய்கிறார்கள்.

Photo by Livia Soh

அங்கு புகைப்படம் எடுக்கும் தெரிவை நீங்கள் தேர்வுசெய்தால், நீங்கள் விரும்பும் புகைப்படத்தைப் பெற நான்கு வாய்ப்புகள் வழங்கப்படும். அதன் பிறகு நீங்கள் விரும்பும் புகைப்படத்தைத் தேர்ந்தெடுக்கலாம்.

Photo by Livia Soh

உங்களுக்கு விருப்பமான ஸ்டிக்கர்களை கொண்டும் நீங்கள் புகைப்படத்தை அலங்கரித்து எடுத்துக்கொள்ளலாம், அதற்கான தெரிவும் (Option) அதில் உள்ளது.

Photo by Livia Soh

அச்சிட்டு பெற நினைக்கும் அளவைத் தேர்வுசெய்யலாம்

  • 10cm x 15cm — S$0.50
  • 13cm x 18cm — S$1.00
  • 21cm x 30cm — S$2.00

மேலும் தேர்வு செய்யும் பிரிவில் ஏராளமான புகைப்பட பிரேம்களும் உள்ளன. விரும்பியவகையில் பிரேம்களை நீங்கள் போட்டுக்கொள்ளலாம்.

 

வெளிநாட்டு ஊழியர்களுக்கு அழைப்பு….. டிக்டாக்கில் வீடியோவைப் பதிவேற்றுங்கள்… பரிசுகளை வெல்லுங்கள்!