COVID-19 பரிசோதனையின் முக்கியத்துவம் குறித்து சிங்கப்பூர் சுகாதார அமைச்சகம் விளக்கம்…!

Singapore MOH reports on the importance of COVID-19 testing
Singapore MOH reports on the importance of COVID-19 testing

COVID-19 பரிசோதனையின் முக்கியத்துவம் குறித்து சிங்கப்பூர் சுகாதார அமைச்சகம் (MOH) மக்களுக்கு ஒரு சில தகவல்களை தெரிவித்துள்ளது.

தற்போது, சுகாதார அமைச்சால் அன்றாடம் 8,000-க்கும் மேற்பட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இம்மாதத் தொடக்கத்தில், அந்த எண்ணிக்கை 2,900-ஆக இருந்தது.

இதுவரை, சிங்கப்பூர் ஒவ்வொரு 1,00,000 நபர்களுக்கும் 2,100 பேரை பரிசோதித்துள்ளது (ஒப்பு நோக்க, அமெரிக்கா 1,600 பேருக்கும், பிரிட்டன் 1,000 பேருக்கும் பரிசோதனைகள் நடத்தியுள்ளன)

இதனால்தான், சிங்கப்பூர், பிற நாடுகளை விட, அதிகமான கிருமித்தொற்று சம்பவங்களைக் கண்டறிகிறது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் புதிதாக 690 பேருக்கு COVID-19 கிருமித்தொற்று உறுதி..!

வெளிநாட்டு ஊழியர்களை பரிசோதித்தல்:

  • சுகாதார அமைச்சு (MOH), அன்றாடம் 3,000 வெளிநாட்டு ஊழியர்களை பரிசோதிக்கிறது (நோய்க்கான அறிகுறிகள், பலரிடம் இல்லை)
  • இன்று வரையில், 21,000-க்கும் மேற்பட்ட நபர்கள், அல்லது பதினைந்து பேரில் ஒருவர், பரிசோதிக்கப்பட்டுள்ளனர்.

எளிதில் பாதிப்புக்கு ஆளாகும் தரப்பினரை பாதுகாக்க சுகாதார அமைச்சகம் (MOH) கூடுதல் பரிசோதனைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

ஆனால், பரிசோதனைகள் மட்டுமல்ல, பாதுகாப்பான தூர இடைவெளி போன்ற மற்ற முக்கியமான நடவடிக்கைகளுக்கு மாற்றாகாது.

அனைவரது சுகாதாரமும் நம் ஒவ்வொருவரையும் சார்ந்துள்ளது என சிங்கப்பூர் சுகாதார அமைச்சகம் (MOH) கேட்டுக்கொண்டது.

கூடுதல் விவரங்கள்: Go.gov.sg/apr27moh

இதையும் படிங்க: சிங்கப்பூரில் கோவிலுக்குள் புகுந்து சிலையை திருடியதாக ஒருவர் கைது..!