திருமண நிகழ்ச்சியில் கோவிட்-19 கட்டுப்பாடுகளை மீறி நடந்த சம்பவம்!

Photo: Business Insider

2021ஆம் ஆண்டு ஜனவரி 30ஆம் தேதியன்று கேலாங் பகுதியிலுள்ள தஞ்சோங் காத்தோங்கி காம்பிளக்சின் மூன்றாவது மாடியில் உள்ள ஆரஞ்சு பால்ரூம்மில் நடைப்பெற்ற திருமண நிகழ்ச்சியில் கோவிட்-19 கட்டுப்பாடுகளை மீறி திருமண விருந்து நடந்துள்ளது.

அதாவது 100 பேர் மட்டுமே கலந்துக்கொள்ள அனுமதிக்கப்பட்ட திருமண நிகழ்ச்சியில் 200க்கும் மேற்பட்டோர் கலந்துள்ளனர்.

வெளிநாட்டு ஊழியர்களின் தங்கும் விடுதிகளில் புதிதாக 136 பேருக்கு நோய்த்தொற்று

இச்சம்பவத்தால் ஆரஞ்சு பால்ரூம் இடத்தின் பொறுப்பாளர்கள் மீதும், திருமணம் ஏற்பாடு செய்தவர்கள் மீதும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

ஜனவரி 30ஆம் தேதியன்று நடந்த இந்த திருமணத்தில் சரியாக 235 பேர் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.

திருமணத்தில் 100 பேர் மட்டுமே கலந்துகொள்ள முடியும் என்பதை பொறுப்பாளர் சரிசெய்வதில் அலட்சியமாக இருந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

திருமண நிகழ்வுகளுக்கான ஆரஞ்சு பால்ரூம் இடப் பொருப்பாளர்கள் மீதும், திருமண ஏற்பாட்டாளர் மீதும் கோவிட்-19 தொற்றுக் காலத்தில் தற்காலிக கட்டுப்பாட்டு ஆணைச் சட்டம் 2020ன், அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வருகின்ற டிசம்பர் மாதம் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை தொடர இருக்கும் நிலையில், கோவிட்-19 கட்டுபாட்டு விதிகளை மீறுவதற்கு காரணமாக இருந்தவர்கள் குற்றத்தைக் ஒப்புக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

எல்லைப்பகுதியின் தளர்வுகளால் சிங்கப்பூரில் அதிக வீடுகள் வாடகைக்கு தேவை!