‘Income Eco Run’ ஏற்பாடு செய்திருந்த மாரத்தான் ஓட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் கிரேஸ் ஃபூ!

'Income Eco Run' ஏற்பாடு செய்திருந்த மாரத்தான் ஓட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் கிரேஸ் ஃபூ!
Photo: Income Eco Run Official Facebook Page

 

சிங்கப்பூரில் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில் ‘Zero Waste’- யை வலியுறுத்தி, ‘Income Eco Run’ என்ற அமைப்பு ஏற்பாடு செய்திருந்த மாரத்தான் ஓட்டம் நேற்று (ஜூன் 11) காலை 04.30 மணியளவில் மரினா அணைக்கட்டு அருகே தொடங்கியது.

யீஷுன் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 17 வயது இளைஞர் உயிரிழப்பு!

இந்த மாரத்தான் ஓட்டத்தில் ஏற்கனவே முன்பதிவு செய்திருந்த 3,000 பேர் பங்கேற்றனர். மூன்று கிலோ மீட்டர் முதல் 21 கிலோ மீட்டர் வரை மாரத்தான் நடைபெற்ற நிலையில், மாரத்தானில் பங்கேற்றவர்கள் கடந்த ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும், சிங்கப்பூர் சுற்றுச்சூழல் கவுன்சிலுக்கு (Singapore Environment Council) இன்சூரன்ஸ் நிறுவனம் 1 வெள்ளியை வழங்கியது. இதில் கலந்து கொண்ட சிங்கப்பூரின் நீடித்த நிலைத்தன்மை மற்றும் சுற்றுப்புறத்துறை அமைச்சர் கிரேஸ் ஃபூ (Minister Grace Fu), 5 கிலோ மீட்டர் தூரம் கடந்து அசத்தியுள்ளார்.

Photo: Income Eco Run
Official Facebook Page

மாரத்தான் காலை 11.00 மணிக்கு முடிவடைந்த நிலையில், மாரத்தானில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

44 பதக்கங்களைக் குவித்த சிங்கப்பூர் அணிக்கு துணை பிரதமர் ஹெங் சுவீ கியட் பாராட்டு!

மாரத்தான் ஓட்டத்தையொட்டி, அதில் பங்கேற்றவர்களுக்கு தேவையான குடிநீர் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளையும் ஏற்பாட்டாளர்கள் செய்திருந்தனர்.

கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக, கடந்த மூன்று ஆண்டுகளாக இந்த மாரத்தான் நடைபெறாத நிலையில், இந்தாண்டு நடைபெற்றதால் ஏராளமானோர் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.