யீஷுன் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 17 வயது இளைஞர் உயிரிழப்பு!

யீஷுன் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 17 வயது இளைஞர் உயிரிழப்பு!
Photo: SCDF

 

சிங்கப்பூரில் உள்ள யீஷுன் ரிங் சாலையில் (783 Yishun Ring Road) உள்ள வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தின் புளோக் 783 அடுக்குமாடி குடியிருப்பில் (Apartment) ஜூன் 10- ஆம் தேதி சனிக்கிழமை அன்று இரவு 08.55 PM மணிக்கு திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இது குறித்து சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை (Singapore Civil Defence Force- ‘SCDF’) மற்றும் சிங்கப்பூர் காவல்துறைக்கு (Singapore Police Force) தொலைபேசி மூலம் தகவல் அளிக்கப்பட்டது.

மே தின நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ள ‘MWC’….. புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் உற்சாகம்!

இதையடுத்து, சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்து வந்தனர். அடுக்குமாடி குடியிருப்பின் 12வது மாடியில் ஒரு வீட்டின் படுக்கையறையில் தீ கொளுந்துவிட்டு எரிந்ததைக் கண்ட தீயணைப்பு வீரர்கள், அங்கு விரைந்து தண்ணீரைப் பீய்ச்சியடித்து தீயை முழுவதுமாக அணைத்தனர். எனினும், அறையில் இருந்த பொருட்கள் முழுவதும் எரிந்து நாசமானது.

தீ விபத்து நடந்த வீட்டில் சுயநினைவின்றிக் கிடந்த 17 வயது இளைஞரை மீட்ட தீயணைப்பு வீரர்கள் உடனடியாக, கூ டெக் புவாட் மருத்துவனையில் (Khoo Teck Puat Hospital) அனுமதித்தனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி அவர் இன்று (ஜூன் 11) உயிரிழந்தார்.

44 பதக்கங்களைக் குவித்த சிங்கப்பூர் அணிக்கு துணை பிரதமர் ஹெங் சுவீ கியட் பாராட்டு!

இதனிடையே, அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சுமார் 50 குடியிருப்பாளர்களை சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினர் மற்றும் காவல்துறையினர், பாதுகாப்பாக வெளியேற்றினர்.

தீ விபத்துக்கான காரணம் குறித்து, காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.