இணையவழி வியாபாரத்தின் விற்பனை அதிகரிப்பு!

Photo: Basis 365

2021ம் ஆண்டு செப்டம்பர் 27ம் தேதி முதல் கோவிட்-19 தாெற்றுப் பரவல் கட்டுப்பாடுகள் மீண்டும் கடுமையாக்கப்பட்ட பின், மக்களில் பலர் வெளியில் செல்லாமல் இணையதளத்தின் வழியாக பொருட்களை வாங்குகின்றனர்.

சிங்கப்பூரில் உள்ள பெரும்பாலான மளிகைக் கடைகள் மற்றும் உணவு விடுதிகளில் கடந்த ஒரு வாரத்தில் இணையவழி விற்பனைகள் அதிகரித்துள்ளது.

நவம்பர் 15 முதல், இந்த நாட்டிற்கும் சிங்கப்பூருக்கும் இடையே சிறப்பு பயண ஏற்பாடு!

கடந்த ஒரு வாரமாக அதிகரித்துள்ள வியாபாரத்தை சமாளிப்பதற்காக ஊழியர்களை அதிகரித்துள்ளதாக ஃபேர்பிரைஸ், ரெட்மார்ட் போன்ற நிறுனங்கள் தெரிவித்துள்ளன.

கடந்த ஒரு வாரத்தில் சில கஸ்டமர்களின், விநியோகக் கட்டணங்கள் உயர்ந்து கொண்டே இருப்பதாகவும் குறிபிட்டனர்.

இருப்பினும் பொருட்களுக்கான தேவை மாறிக்கொண்டே இருப்பதால், அதனை டெலிவரி செய்வதற்கான நேரமும் மாறலாம் என ஃபேர்பிரைஸ் நிறுவனப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூர் சாங்கி விமான நிலையம் Terminal-1ல் தீ பிடித்தது…