‘இந்திய சுதந்திர தினக் கொண்டாட்டம்’- சிங்கப்பூர் வாழ் இந்தியர்களுக்கு இந்திய தூதரகம் அழைப்பு!

'இந்திய சுதந்திர தினக் கொண்டாட்டம்'- சிங்கப்பூர் வாழ் இந்தியர்களுக்கு இந்திய தூதரகம் அழைப்பு!
File Photo

 

77வது இந்திய சுதந்திர தினம், இந்தியா முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்படவுள்ளது. வரும் ஆகஸ்ட் 15- ஆம் தேதி சுதந்திரத் தினத்தன்று காலை 08.00 மணிக்கு தலைநகர் டெல்லியில் உள்ள செங்கோட்டையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, கொடியேற்றி வைத்து சிறப்புரையாற்றுகிறார். அதைத் தொடர்ந்து, இந்தியாவின் வலிமையை உலகிற்கு பறைச்சாற்றும் வகையில், முப்படை வீரர்களின் அணி வகுப்பு மற்றும் மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை இடம்பெறுகின்றன. இந்திய விமானப்படை வீரர்கள் வான் சாகசங்களையும் செய்துக் காண்பிக்க உள்ளனர்.

ஆடி மாத நான்காம் வெள்ளியையொட்டி, சிங்கப்பூர் கோயில்களில் சிறப்பு பூஜை!

அதேபோல், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் முதலமைச்சர்கள் குடியேற்றி வைக்கவுள்ளனர். அதைத் தொடர்ந்து, உலக நாடுகளில் உள்ள இந்திய தூதரகங்களும் சுதந்திர தினத்தைக் கொண்டாடுவதற்கான ஏற்பாடுகளை முடுக்கிவிட்டுள்ளனர்.

'இந்திய சுதந்திர தினக் கொண்டாட்டம்'- சிங்கப்பூர் வாழ் இந்தியர்களுக்கு இந்திய தூதரகம் அழைப்பு!
Photo: High Commission of India in Singapore

அந்த வகையில், சிங்கப்பூரில் இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “வரும் ஆகஸ்ட் 15- ஆம் தேதி இந்திய சுதந்திர தினத்தையொட்டி, சிங்கப்பூரில் உள்ள 31 கிரான்ச் சாலையில் (31 Grange Road) அமைந்துள்ள இந்திய தூதரகத்தில் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 15- ஆம் தேதி காலை 09.00 மணிக்கு நடைபெறும் நிகழ்ச்சியில் சிங்கப்பூருக்கான இந்திய தூதர் தேசிய கொடியை ஏற்றி வைத்து சிறப்புரையாற்றுகிறார்.

லாரியில் இருந்து கீழே விழுந்த இந்திய ஊழியர்.. முதலாளி இழப்பீடு வழங்க வேண்டும் – தீர்ப்பு

பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும் இடம் பெறவுள்ளது. எனவே, காலை 08.45 மணிக்கே சிங்கப்பூர் வாழ் அனைத்து இந்தியர்களும் வருகை தந்து நிகழ்ச்சிகளை சிறப்புக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.