“இந்திய நகரங்களில் இருந்து சிங்கப்பூர் வெளியாக சீன நகரங்களுக்கு விமான சேவை”- ஸ்கூட் விமான நிறுவனம் அறிவிப்பு!

scoot-flight-diverted
Photo:Facebook/flyscoot

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் குழுமத்துக்கு (Singapore Airlines Group) சொந்தமான ஸ்கூட் விமான நிறுவனம் (Flyscoot) வெளியிட்டுள்ள அறிவிப்பில், “இந்தியாவின் திருச்சி, ஹைதராபாத், கோவை, அமிர்தசரஸ், திருவனந்தபுரம், விசாகப்பட்டினம் ஆகிய ஆறு நகரங்களில் இருந்து சீனாவின் ஹாங்காங் (HongKong), வூகான் (Wuhan), தியான்ஜின் (Tianjin), மக்காவு (Macau), ஃபியூஸோ (Fuzhou), ஜென்ங்ஸோ (Zhengzhou), குவான்ங்ஸோ (Guangzhou), ஹாங்ஸோ (Hangzhou), நான்ஜிங் (Nanjing) ஆகிய ஒன்பது நகரங்களுக்கு இரு மார்க்கத்திலும் சிங்கப்பூர் வழியாக விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது.

மலேசியாவின் புதிய பிரதமராகப் பொறுப்பேற்றுள்ள அன்வர் இப்ராஹிமுக்கு சிங்கப்பூர் பிரதமர் வாழ்த்து!

விமான பயண அட்டவணை, விமான பயண டிக்கெட் முன்பதிவு உள்ளிட்டக் கூடுதல் விவரங்களுக்கு ஸ்கூட் விமான நிறுவனத்தின் https://www.flyscoot.com/en என்ற அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தை அணுகலாம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Photo: Flyscoot Airlines

பாலின அறுவை சிகிச்சை செய்த கைதியை எந்த சிறையில் அடைப்பது? – ஆண்கள் சிறையிலா? மகளிர் சிறையிலா?

இந்திய நகரங்களில் சீன நகரங்களுக்கான விமான சேவைக்கான விமான பயண டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ள நிலையில், அதன் முழு விவரங்களையும் ஸ்கூட் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தை அணுகலாம் என குறிப்பிட்டுள்ளது.

இந்தியாவில் இருந்து சீனாவுக்கு செல்லும் பயணிகள், அந்நாட்டு அரசின் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.