சிங்கப்பூர் பாதுகாப்புத்துறை அமைச்சருடன் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சந்திப்பு!

Photo: India Foreign Minister Official Twitter Page

ஜெர்மனி நாட்டின் தலைநகர் முனிச்சில் (Munich) ’58வது முனிச் பாதுகாப்பு மாநாடு’ (58th Munich Security Conference- ‘MSC’) நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் இந்தியா, ஜெர்மனி, உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் அமைச்சர்கள் பங்கேற்றுள்ளனர். அத்துடன், அமைச்சர்களின் சந்திப்பும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அந்த வகையில், சிங்கப்பூர் பாதுகாப்புத்துறை அமைச்சர் டாக்டர் இங் எங் ஹென் (Minister for Defence Dr Ng Eng Hen), முனிச் பாதுகாப்பு மாநாட்டில் பங்கேற்றுள்ளார்.

நார்வே, பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொள்கிறார் சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சர்!

இந்த நிலையில், சிங்கப்பூர் பாதுகாப்புத்துறை அமைச்சரை, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கர் நேற்று (19/02/2022) நேரில் சந்தித்துப் பேசினார். இச்சந்திப்பில், இருதரப்பு மற்றும் ஆசியான் தொடர்பான பாதுகாப்பு, ஒத்துழைப்பு குறித்து இவருவரும் ஆலோசித்தனர்.

சிங்கப்பூர் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் இடம் பெற்ற முக்கிய அறிவிப்புகள்!

அதைத் தொடர்ந்து, 13வது முனிச் இளம் தலைவர்கள் வட்டமேசை மாநாட்டில் (13th Munich Young Leaders Roundtable) கலந்துக் கொண்ட சிங்கப்பூர் பாதுகாப்புத்துறை அமைச்சர் டாக்டர் இங் எங் ஹென், கடல்சார் பாதுகாப்பு உள்ளிட்டத் தலைப்புகளில் உரையாற்றினார்.