சிங்கப்பூரில் முதலீட்டாளர்கள், சிஇஓ-க்களை நேரில் சந்தித்த இந்திய அமைச்சர்!

Photo: High Commission of India in Singapore Official Facebook Page

சிங்கப்பூரில் அரசுமுறை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை, டெக்ஸ்டைல்ஸ் துறை அமைச்சர் பியூஷ் கோயல், சிங்கப்பூரில் உள்ள தொழில் முதலீட்டாளர்கள் (Investors) மற்றும் தொழில் நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளான சிஇஓ- க்களை (CEOs) நேற்று (24/09/2022) நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

“தூரமா போனும் காசு இருந்த தாங்க”…சிங்கப்பூர் ரயில் நிலையங்களில் பலரை ஏமாற்றி S$28,000 வரை பெற்ற ஆடவருக்கு சிறை

அப்போது, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான இந்திய அரசு, தொழில் நிறுவனங்களுக்கு அளித்து வரும் சலுகைகள், திட்டங்கள் உள்ளிட்டவைக் குறித்து எடுத்துரைத்தார். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை இந்திய தூதரகம் செய்திருந்தது. இந்த நிகழ்வில் இந்திய தூதர் குமரன் மற்றும் தூதரக அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.

Photo: High Commission of India in Singapore Official Facebook Page

உலகின் சிறந்த விமானச் சேவை: இரண்டாம் இடம் பிடித்து சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் சாதனை

முதலீட்டாளர்களை இந்திய அமைச்சர் சந்தித்ததன் மூலம், சிங்கப்பூரில் உள்ள தொழில் நிறுவனங்கள், இந்தியாவில் தங்களது கிளைகளை அமைத்து, இளைஞர்களுக்கு அதிகளவில் வேலை வாய்ப்புகளை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.