இந்தியாவில் சர்வதேச பயணிகள் விமான சேவை மீண்டும் தொடக்கம் – சிங்கப்பூருக்கு இனி ஈஸியா செல்லலாம்!

Pic: AFP

இந்தியாவில் COVID-19 பரவல் காரணமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த அனைத்துலக விமான சேவை 2 ஆண்டுகளுக்கு பிறகு இன்று (மார்ச் 27) மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கடந்த 2020ம் ஆண்டு மார்ச் 23 முதல் சர்வதேச விமான போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது. இருப்பினும், குறிப்பிட்ட சில நாடுகளுக்கு மட்டும் பிரத்யேகமாக விமானங்கள் இயக்கப்பட்டன.

விமான போக்குவரத்தை துவக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதுடன் விமானங்கள் மற்றும் விமான நிலையங்களில் COVID-19 விதிமுறைகளில் தளர்வுகளும் செய்யப்பட்டுள்ளன.

சிங்கப்பூரில் வங்கி தொடர்புடைய மோசடி சம்பவங்களில் ஈடுபட்ட 35 பேர் அதிரடி கைது.!

கேபின் குழு உறுப்பினர்கள் இனி தனிப்பட்ட பாதுகாப்பு (PPE) ஆடைகளை அணியத் தேவையில்லை என்றும், அதே சமயம், பொது இடங்களில் பயணிகள், விமான நிலைய ஊழியர்கள் முகக்கவசம் அணிவது, கை சுத்திகரிப்பான்களை பயன்படுத்துவது கட்டாயமாகும்.

சர்வதேச விமான போக்குவரத்து துவங்கி உள்ளதால், மலேசியா, தாய்லாந்து, துருக்கி மொரிஷியஸ், அமெரிக்கா, ஈராக் உள்ளிட்ட 40 நாடுகளில் இருந்து 60 சர்வதேச நிறுவனங்கள் இந்தியாவிற்கு விமானங்களை இயக்க முடியும்.

முழு கோவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொண்ட பயணிகள் வரும் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் பயணத்திற்கு முந்தைய (Pre-departure) கோவிட்-19 சோதனை மூலம் சிங்கப்பூருக்குள் நுழைய முடியும்.

அதோடு மட்டுமல்லாமல், 12 வயது மற்றும் அதற்குக் குறைந்த வயது குழந்தைகளும் மேலே சொன்ன முறைப்படி சிங்கப்பூருக்குள் வரலாம்.

தற்போதுள்ள VTL திட்டத்துக்கு மாற்றாக, “Vaccinated Travel Framework” எனப் பெயரிடப்பட்ட புதிய பயணத் திட்டம் வரும்.

இந்தியாவில் முன்னதாக சிறப்பு பயண ஏற்பாட்டின் மூலம் விமானங்கள் இயக்கப்பட்டு வந்தன. தற்போது வழக்கமான விமானங்கள் இயக்கப்படுவதால் பயண கட்டணங்கள் குறைய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் முதன்முதலாக “ஹாட் ஏர் பலூன்” சவாரி – சும்மா ஜாலியாக பறக்கலாம்!