சிங்கப்பூரின் உதவிக்கு நன்றி தெரிவித்த இந்தியா!

India thanked singapore oxygen
(Photo: YourStory website)

இந்தியாவின் பல பகுதிகளை புரட்டிப் போட்டு கொண்டிருக்கும் COVID-19 தொற்றின் இரண்டாவது அலை குறித்து அண்மையில் பல செய்திகளை நாம் காண முடிகிறது.

இதுகுறித்து இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் சிங்கப்பூர், தாய்லாந்து மற்றும் நார்வே ஆகிய நாடுகளைச் சேர்ந்த வெளியுறவு அமைச்சர்களுடன் தனித்தனியாக தொலைபேசி வழியாக பேச்சுவார்த்தை நடத்தினார்.

சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதியில் வசிக்கும் 2 ஊழியர்களுக்கு தொற்று

சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணனுடனான தனது உரையாடலில் திரு ஜெய்சங்கர், “இந்த கடினமான காலங்களில் இரு நாடுகளுக்கும் இடையிலான சிறந்த உறவு இன்னும் முக்கியமானது” என்றார்.

அதில் ஆக்ஸிஜன் தொடர்பான உபகரணங்களை வழங்கிய சிங்கப்பூருக்கு நன்றி கூறி அவர் ட்வீட் செய்துள்ளார்.

இந்தியா எந்த உதவிக்கு சிங்கப்பூரை நாடலாம் என்று அமைச்சர் பாலகிருஷ்ணன் உறுதி கூறினார்.

COVID-19: டான் டோக் செங் மருத்துவமனையுடன் தொடர்புடைய ஒருவர் மரணம்