வெளிநாட்டு பயணிகளுக்கு இந்தியாவில் தீவிர கண்காணிப்பு – சிங்கப்பூர் உள்ளிட்ட பயணிகளுக்கு தனிமை…

Photo: Onmanorama

தென்னாப்பிரிக்கா நாட்டில் கண்டறியப்பட்ட உருமாறிய ஒமிக்ரான் கிருமி உலக நாடுகளுக்கு மத்தியில் மீண்டும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதை தொடர்ந்து, வெளிநாடுகளில் இருந்து இந்திய நாட்டுக்கு வரும் மக்களை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு இந்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

பிரிந்து வாடும் குடும்பங்களை மீண்டும் ஒன்றிணைக்கும் VTL சேவை

இந்நிலையில், வெளிநாடுகளில் இருந்து கேரள மாநிலத்துக்கு வருபவர்கள் 7 நாட்கள் தனிமை கட்டாயம் என்று கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூரில் இருந்து இந்தியா வரும் பயணிகளையும் மிக தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்று இந்திய அரசு கூறியுள்ளது.

அதோடு சேர்த்து, வங்காளதேசம், தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பிய நாடுகள், இஸ்ரேல், ஹாங்காங், போர்ட்ஸ்வானா, பிரேசில், சீனா, மொரிசீயஸ், நியூசிலாந்து, ஜிம்பாப்வே ஆகிய நாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளையும் மிக தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்று அது தெரிவித்துள்ளது.

இதன்படி கேரளாவில், மேற்கண்ட நாடுகளில் இருந்து வரும் 5 வயதுக்கு மேல் உள்ள அனைத்து பயணிகளும் 72 மணி நேரத்திற்கு முன்பு PCR சோதனை எடுக்க வேண்டும் என்று வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.

மேலும், தனிமை முடிந்த பிறகும் PCR சோதனை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூரில் வேலைவாய்ப்பு மோசடி – 30க்கும் மேற்பட்டோர் கைது