சிங்கப்பூரில் வேலைவாய்ப்பு மோசடி – 30க்கும் மேற்பட்டோர் கைது

scams Suspects investigated
Photo: Pickawood/Unsplash

சிங்கப்பூரில் மோசடிகளில் ஈடுபட்ட சந்தேகத்தில் மொத்தம் 39 பேர் கைது செய்யப்பட்டதாக போலீசார் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளனர்.

சுமார் S$20 மில்லியனுக்கும் அதிகமான பணம் மோசடி செய்யப்பட்டுள்ளதாகவும், இதில் வேலைவாய்ப்பு மற்றும் இணையம் வழி மோசடிகளும் சந்தேகிக்கப்படுவதாகவும் போலீசார் கூறியுள்ளனர்.

VTL திட்டத்தில் 3 நாடுகளுடனான பயண ஏற்பாட்டை ஒத்திவைத்த சிங்கப்பூர்

கடந்த நவம்பர் 22 மற்றும் 26ஆம் தேதிகளுக்கு இடையில் தீவு முழுவதும் மோசடி தடுப்பு அமலாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

அந்த நடவடிக்கையின்போது 16 மற்றும் 65 வயதுக்குட்பட்ட 35 ஆண்களும் நான்கு பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் தங்களின் வங்கிக் கணக்குகளை விற்றதாகவும் அல்லது அவர்களின் சிங்பாஸ் தகவல்களை மோசடி கும்பலிடம் ஒப்படைத்ததாகவும் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

விற்கப்படும் ஒவ்வொரு வங்கிக் கணக்கிற்கும் S$5,000 அல்லது விற்கப்படும் ஒவ்வொரு சிங்பாஸ் தகவல்களுக்கும் S$400 என உறுதியளிக்கப்பட்டது. இருப்பினும், அவர்களில் பெரும்பாலோர் வாக்குறுதியளிக்கப்பட்ட கட்டணத்தைப் பெறவில்லை.

சமூக ஊடக தளங்கள் மற்றும் அரட்டை செயலிகளின் விளம்பரங்களில் வழியாக வேலை மோசடிகளால் பாதிக்கப்பட்டவர்கள் ஏமாற்றப்பட்டனர் என்றும் அது கூறியுள்ளது.

சிங்கப்பூர் – மலேசியா இடையேயான விமானம் மற்றும் நிலவழி VTL சேவைகள் தொடக்கம்