இந்தியப் பெண்களை வேலைக்கு எடுத்து, அவர்களிடம் Work permit, பாஸ்போர்ட்டை கைப்பற்றி கடத்தி அடித்து துன்புறுத்தியவருக்கு சிறை, அபராதம்!

work pass holder forged documents extend stay
(PHOTO: Today)

நடனக் பெண்களாக வேலைக்கு எடுக்கப்பட்ட மூன்று இந்தியப் பெண்களைக் கடத்தியதற்காக பொழுதுபோக்கு கிளப்பின் ஆபரேட்டருக்கு 41 மாதங்கள் சிறைத்தண்டனையும் S$27,365 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

ஜெய்ஹோ கிளப் (Jaiho Club) ஆபரேட்டரான 47 வயதுமிக்க அழகர் பாலசுப்ரமணியன், பெண்கள் வேலையை விட விரும்பினால், பணத்தைத் திருப்பி தர முடியாது என்று கட்டுப்பாடுகளை விதித்ததாக மனிதவள அமைச்சகம் (MOM) செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 19) அறிக்கையில் கூறியது.

கனவுகளோடு வேலைக்கு சென்ற முதல் நாள்… லிப்ட்டில் இருந்து விழுந்து உடல் நசுங்கி உயிரிழந்த மலேசிய ஊழியர்!

2016ஆம் ஆண்டில் ஆறு மாத ஒப்பந்தத்தின் கீழ் வேலைக்கு சேர்ந்த அவர்களுக்கு சம்பளம் என்று எதுவும் வழங்கப்படவில்லை என கூறப்பட்டுள்ளது.

பாலசுப்ரமணியன் அவர்களின் பாஸ்போர்ட், work permits அனுமதி மற்றும் மொபைல் போன்களையும் பறிமுதல் செய்து துன்புறுத்தியுள்ளார்.

அதோடு மட்டுமல்லாமல், ஒப்புதல் இல்லாமல் இந்தியா திரும்பினால் அவர்களை துன்புறுத்தி காயப்படுத்துவோம் என்றும் பாலசுப்ரமணியன் மிரட்டியுள்ளார்.

கூடுதலாக, இரண்டு பெண்கள் அவரால் தாக்கப்பட்டதாகவும் MOM குறிப்பிட்டுள்ளது.

இதில் பாதிக்கப்பட்ட அந்த மூன்று பெண்களும் பத்திரமாக இந்தியா திரும்பியுள்ளனர்.

பெண்ணின் சக்கர நாற்காலியை எட்டி உதைத்து ரகளை செய்த கிளினிக் ஊழியர் – வீடியோ வைரல்: விசாரணை