“வெளிநாட்டு ஊழியர்களுக்கு தீர்வு தொகை வேண்டும்” – இரு நிறுவனங்களை ஏமாற்றிய இந்தியருக்கு செக்

Indian charged for duping insurers for foreign workers injury claims

சிங்கப்பூரில் காப்பீட்டு நிறுவனங்களை ஏமாற்றியதற்காக இந்தியர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இரண்டு வெளிநாட்டு ஊழியர்களின் காயங்களுக்குத் தீர்வுத் தொகை (injury claims) வேண்டி, இரு காப்பீட்டு நிறுவனங்களை ஏமாற்றியதாகவும், கிட்டத்தட்ட S$77,000 செலுத்த வைக்க திட்டம் போட்டதாகவும் இந்தியர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்றம், நாடாளுமன்றத்தில் மொழிபெயர்ப்பாளர்.. மறைந்த திரு.பழனியப்பனுக்கு தேசிய தின விருது

அதற்காக, தப்பியோடிய வழக்கறிஞரின் பெயரைப் பயன்படுத்தி அவர் இந்த மோசடி வேலையில் அவர் ஈடுப்பட்டதாகவும் சொல்லப்பட்டுள்ளது.

சட்டத் தொழில் சட்டத்தின் கீழ், Whitefield Law Corp நிறுவனத்தைச் சேர்ந்த அங்கீகரிக்கப்பட்ட நபருடன் தாங்கள் பேச்சுவார்த்தை நடத்துவதாக நிறுவனங்களை நம்ப வைத்து ஏமாற்றியதாக 48 வயதான சஹா ரஞ்சித் சந்திரா என்ற அவர் மீது செவ்வாயன்று நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.

2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் வழக்கறிஞர் சார்லஸ் யோ யாவ் ஹுய் என்ற பெயரில் அந்த காப்பீட்டு நிறுவனங்களை சந்திரா தொடர்பு கொண்டதாகக் கூறப்படுகிறது.

பைனான்ஸ் மற்றும் கார்ப்பரேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் (ACRA) இணையப்பக்கத்தில் தேடியதில், Hui வைட்ஃபீல்ட் லா கார்ப் நிறுவனத்தில் பங்குதாரர் மற்றும் இயக்குநராக இல்லை என்று கண்டறியப்பட்டது.

இந்நிலையில், Ranjit Investment Holdings மற்றும் RS Global Immigration Consultancy உட்பட பல நிறுவனங்களின் இயக்குனரான சந்திரா மீது இரண்டு மோசடி குற்றச்சாட்டுகள் உட்பட ஐந்து குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

சிங்கப்பூரின் முக்கிய செய்திகளை உடனே அறிய Tamil Micset வாட்ஸ்ஆப் குழுவில் இணையுங்கள் – கிளிக் செய்யுங்கள்

சிங்கப்பூரில் திடீரென தோன்றிய மர்ம கருப்பு வளையம்: என்ன அது? – பொதுமக்கள் குழப்பம்